பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் மகளிருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை ஹர்ஜிந்தர் கௌருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“காமன்வெல்த் போட்டிகளில் நமது பளுதூக்கும் வீரர்கள் குழு மிகச் சிறப்பாக செயலாற்றியுள்ளது. அந்த வரிசையில், ஹர்ஜிந்தர் கௌர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இத்தகைய சிறப்பான சாதனையைப் புரிந்த அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”
***************
(Release ID: 1847230)
Our weightlifting contingent has performed exceptionally well at the Birmingham CWG. Continuing this, Harjinder Kaur wins a Bronze medal. Congratulations to her for this special accomplishment. Best wishes to her for her future endeavours. pic.twitter.com/0dPzgkWT3y
— Narendra Modi (@narendramodi) August 2, 2022