Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் ஆடவர்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் குமாருக்கு பிரதமர் வாழ்த்து


2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர்களுக்கான 10,000 மீட்டர் வேக நடைப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

பர்மிங்காம் விளையாட்டுகளில் நமது  வேக நடைப் பந்தய பயிற்சி குழு சிறந்து விளங்குவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 10,000 மீ பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் குமாருக்கு வாழ்த்துகள். அவரது வரவிருக்கும் முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள். #Cheer4India”

•••••••••••••