Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காந்திஜெயந்தியையொட்டி மகாத்மா காந்திக்குப் பிரதமர் புகழாரம் சூட்டி மரியாதை செலுத்தியுள்ளார்

காந்திஜெயந்தியையொட்டி மகாத்மா காந்திக்குப் பிரதமர் புகழாரம் சூட்டி மரியாதை செலுத்தியுள்ளார்


மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டினார். காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குமாறும்  மக்களைத் திரு மோடி வலியுறுத்தினார். மகாத்மா காந்தி குறித்த தமது எண்ணங்களின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

#காந்திஜெயந்தியன்று மகாத்மா காந்திக்குப் புகழஞ்சலி செலுத்துகிறேன். இந்தியா, சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவைக் கொண்டாடுவதால் இந்த காந்திஜெயந்தி கூடுதல் சிறப்பு கொண்டது.தேசத்தந்தையின் சிந்தனைகளுடன் எப்போதும் வாழ்வோம். காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குமாறும்  மக்களை நான் வலியுறுத்துகிறேன்.”

********