Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காத்ராவில் பிரதமர்

காத்ராவில் பிரதமர்

காத்ராவில் பிரதமர்

காத்ராவில் பிரதமர்


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் காத்ராவுக்கு வருகை புரிந்தார்.
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி நாராயணா உயர் சிறப்பு மருத்துவமனையை அவர் துவக்கி வைத்தார். ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

தமது உரையில் இப்பல்கலைக் கழகம் மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு வருகைப் புரிந்த ஏழை யாத்திரிகைகள் அளித்த நன்கொடையில் உருவாக்கப்பட்டது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். மாணவர்கள் ஏழைகளுக்கு ஏதாவது செய்வதற்கு உறுதி ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாடு தற்போது புதிய சிகரங்களை நோக்கி நடைபோட்டுக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் இளமை உள்ள மக்கள் தொகை கொண்ட நாட்டினால் இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்றார். 21-ம் நூற்றாண்டு அறிவுசார் நூற்றாண்டு என்றும் எப்போதெல்லாம் அறிவு சகாப்தம் ஏற்பட்டதோ அப்போதெல்லாம் இந்தியா முன் நின்று வழிகாட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

கல்வி கற்பதில் மாணவியர் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருப்பதை பிரதமர் பாராட்டினார். ஒலிம்பிக் போட்டிகளின் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தீபா கர்மகார் இந்தியாவின் முதலாவது பெண்மணியாக தகுதி பெற்றதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

பின்னர் பிரதமர் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் வாரிய விளையாட்டு வளாகத்தை துவக்கி வைத்தார். பொது கூட்டம் ஒன்றிலும் உரையாற்றினார். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முப்தியை அவரது ஆற்றல் மிக்க தலைமைக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எதிர்காலம் பற்றி மிக ஆர்வத்துடன் பேசி அமைக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. முப்தி முகமது சயீத்-ன் பணிகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.

விளையாட்டு வளாகம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் சமுதாயத்தில் விளையாட்டு வீரர் மனப்பான்மையை உருவாக்க விளையாட்டுகள் மிகவும் முக்கியமானவை என்றார். 2017 சர்வதேச கால்பந்து சங்கங்களின் இணையம் (FIFA) 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டிகளை இந்தியா நடத்த உள்ளதை அவர் குறிப்பிட்டார். இந்த போட்டி விளையாட்டுகளை கொண்டாடுவதற்கு நமக்கு கிடைத்த வாய்ப்பு என்றும் பிரதமர் கூறினார்.

ஜம்மு காஷ்மீருக்கான திரு. அடல் பிகாரி வாஜ்பேயி-ன் நெடுநோக்கான மனிதநேயம், ஜனநாயகம் மற்றும் காஷ்மீர் நேயம் ஆகியவற்றை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த நெடுநோக்கை மனதில் கொண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மேம்பாட்டிற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் கூறினார்.