Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காசியாபாத்- அலிகார் விரைவுச்சாலையில் 100 கிலோமீட்டர் தொலைவிற்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு


காசியாபாத்- அலிகார் விரைவுச்சாலையில் 100 கிலோமீட்டர் தொலைவிற்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்ததுடன், முக்கியமான நெடுஞ்சாலை வழியில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க சாதனை என்றும் கூறியுள்ளார்.

 

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரியின்  ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது:

 

“முக்கியமான நெடுஞ்சாலையில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. மேம்பட்ட உள்கட்டமைப்பிற்கு, வேகம் மற்றும் நவீன நடைமுறைகளில் முக்கியத்துவம் செலுத்தப்பட்டு வருவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.”

***

AD/RB/DL