Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காசநோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் தீவிர முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு


காசநோயை ஒழிக்கும் இந்தியாவின் லட்சிய இயக்கத்திற்கு பங்களித்த ஒவ்வொருவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். ஆரோக்கியமான மற்றும் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வழிவகுக்கும் தீவிர முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் திரு ஜே.பி.நட்டாவின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு அவர் பதிலளித்து எழுதியிருப்பதாவது:

“காசநோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தி, காசநோய் இல்லாத இந்தியாவுக்கு #TBMuktBharat பங்களிப்பு செய்யும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். இந்த முயற்சி அடிப்படை நிலையில் எவ்வாறு விரைவு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆரோக்கியமான இந்தியா உறுதி செய்யப்படுகிறது”.

***

(Release ID: 2115245)
TS/IR/RR/KR