காசநோய் இல்லாத இந்தியாவுக்கான தீவிர 100 நாள் இயக்கம் அண்மையில் முடிவடைந்தது. இது காச நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்குத் தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“காச நோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம் வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. காசநோய் இல்லாத இந்தியாவுக்கான தீவிர 100 நாள் இயக்கம் அண்மையில் முடிவடைந்தது. இது காச நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இதன் முக்கிய அம்சங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா @JPNadda பகிர்ந்துள்ளார் – இது அவசியம் படிக்கப்பட வேண்டியவை.”
—–
(Release ID: 2114708)
TS/SMB/KPG/KR
India’s fight against TB is witnessing remarkable progress. The Union Health Minister, Shri @JPNadda shares key insights on the recently concluded 100-day Intensified TB Mukt Bharat Abhiyaan which has set a strong foundation for a TB-free India – A must read. https://t.co/xxvrfofqVD
— PMO India (@PMOIndia) March 25, 2025