பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை காகிநாடாவில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான நிலம் வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலை எண். 149-ஐ மாற்றி அமைப்பதற்கு தனது ஒப்புதலை வழங்கியது. இது தொடர்பாக கீழ்க்கண்ட முடிவுகளும் எடுக்கப்பட்டன:-
அ) காகிநாடாவில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான நிலத்தின் வழியாச் செல்லும் தற்போதைய நெடுஞ்சாலைக்கு கீழேயுள்ள ஆந்திரப் பிரதேச மாநில அரசின் 11.25 ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொள்வது.
ஆ) காகிநாடாவில் கடற்படைக்குச் சொந்தமான 5.23 ஏக்கர் நிலத்தை பிரதேச மாநில அரசிடம் ஒப்படைப்பது.
இ) மாற்று சாலையொன்றை உருவாக்குவதற்கான செலவுகள், அதற்கான நிலத்தைக் கையகப்படுத்துவது ஆகியவற்றுக்காக ஆந்திரப் பிரதேச மாநில அரசுக்கு இழப்பீடாக ரூ. 1882. 775 லட்சம் வழங்குவது.
மாநில நெடுஞ்சாலையை மாற்றியமைப்பதன் மூலம் விபத்துகளை குறைப்பதுடன் இந்த நிறுவனத்தில் வழங்கப்பட்டு வரும் பயிற்சி தடைபடாமல் தொடரவும், அதன் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவி செய்யும். அங்குள்ள நிலம்-நீர் ஆகிய இரு பகுதிகளும் போர்ப்பயிற்சிக்கான மையத்தின் கட்டமைப்பு, பாதுகாப்பு ஆகியவற்றையும் வலுப்படுத்துவதாகவும் இது அமையும்.