Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கல்வியாளரும், பொது நுண்ணறிவாளருமான பேராசிரியர் நிக்கோலஸ் டேலப்புடனான பிரதமரின் சந்திப்பு

கல்வியாளரும், பொது நுண்ணறிவாளருமான பேராசிரியர் நிக்கோலஸ் டேலப்புடனான பிரதமரின் சந்திப்பு


அமெரிக்க கணித புள்ளியியல் நிபுணரும்,  கல்வியாளரும், பொது நுண்ணறிவாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் நிக்கோலஸ் டேலப்பை, பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று சந்தித்துப் பேசினார்.

 

சிறந்த கருத்துக்கள் மூலம்  சிக்கலான, ஆபத்தான சூழ்நிலைகளில் நல்ல தீர்வுகளை அளித்து பொது நுண்ணறிவாளராக வெற்றியாளராகத் திகழும் பேராசிரியர் டேலப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

 

பேராசிரியர் டேலப்புடனான உரையாடலின் போது இந்திய இளைய தொழில் முனைவோரின்  கடினமான சூழலை எதிர்கொள்ளும் திறன் மற்றும் இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வரும் ஸ்டார்ட்அப் சூழல் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.

******

(Release ID: 1933799

SM/IR/KPG/KRS