Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கலோனெல் (ஓய்வு) எச் கே சச்தேவாவின் மனைவி திருமதி உமா சச்தேவாவை பிரதமர் சந்தித்தார்


கலோனெல் (ஓய்வு)  எச் கே சச்தேவாவின் மனைவி திருமதி உமா சச்தேவாவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். 90 வயது நிறைந்த இவர், தமது மறைந்த கணவர் கலோனெல் (ஓய்வு)  எச் கே சச்தேவா எழுதிய 3 நூல்களின் பிரதிகளை பிரதமருக்கு வழங்கினார்.

தொடர்ச்சியான ட்விட்டர் செய்திகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

இன்று திருமதி உமா சச்தேவா அவர்களுடன் நினைவுகூரத்தக்க கலந்துரையாடலை நான் மேற்கொண்டேன். அவர் 90 வயது நிறைந்தவர். மகத்தான துணிவும், நன்னம்பிக்கை உணர்வும் கொண்டவர். அவரது கணவர் கலோனெல் (ஓய்வு)  எச் கே சச்தேவா பலராலும் மதிக்கப்பட்ட மூத்த ராணுவ அதிகாரியாவார். உமா அவர்கள், ஜென்ரல் வேத்மாலிக் அவர்களின் அத்தையாவார்.”

உமா அவர்கள், அவரது மறைந்த கணவரால் எழுதப்பட்ட 3 நூல்களின் பிரதிகளை எனக்கு வழங்கினார். அவற்றில் 2 கீதையுடன் தொடர்புடையவை. 3 வது நூல் செந்நீரும். கண்ணீரும் என பெயரிடப்பட்டிருப்பது. நாட்டின் பிரிவினை காலத்தில் கலோனெல் (ஓய்வு) எச்கே சச்தேவாவின் அனுபவங்களும், அவரது வாழ்க்கையில் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் பற்றியது

பிரிவினை காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில். ஆகஸ்ட் 14 – பிரிவினை கொடூரங்களின் நினைவு தினமாக அனுசரிப்பது என்ற இந்தியாவின் முடிவு குறித்து நாங்கள் விவாதித்தோம். காயங்களிலிருந்து மீண்டு தங்களின் வாழ்க்கையை கட்டமைத்து, தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு  செய்தவர்களை நினைவுகூர்வது இதன் முக்கிய அம்சமாகும்.  இவர்கள் மனித குலத்தின் மனஉறுதியையும், துணிவையும் காவியமாக்கியிருக்கிறார்கள்.

**************

SMB/RS/SM