Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கலிபோர்னியா, நியுயார்க், சான் ஜோஸ் நகரில் 26 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்.

கலிபோர்னியா, நியுயார்க், சான் ஜோஸ் நகரில் 26 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்.

கலிபோர்னியா, நியுயார்க், சான் ஜோஸ் நகரில் 26 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்.

கலிபோர்னியா, நியுயார்க், சான் ஜோஸ் நகரில் 26 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்.

கலிபோர்னியா, நியுயார்க், சான் ஜோஸ் நகரில் 26 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்.

கலிபோர்னியா, நியுயார்க், சான் ஜோஸ் நகரில் 26 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்.

கலிபோர்னியா, நியுயார்க், சான் ஜோஸ் நகரில் 26 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்.


நியுயார்க் நகரில் நான்கு நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

சான் ஜோஸ் நகரில் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை பார்வையிடுகிறார்.

சான் ஜோஸ் நகரில், ஐடி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்திக்கிறார்.

டிஜிட்டல் இந்தியா நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.

நான்கு நாடுகள் மாநாடு

26 செப்டம்பர் 2015 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், நியுயார்க் நகரில், நான்கு நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டார். பிரேசில் அதிபர் டில்மா ரூசுப், ஜெர்மனியின் வேந்தர் ஏஞ்சலா மெர்கெல், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் துவக்கத்தில் உரையாற்றிய பிரதமர், ” நாம் ஒரு டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம். புதிய வளர்ச்சிப் பரிமாணங்கள் காரணமாகவும், செல்வம் சேர்ப்பதில் உள்ள இடைவெளி காரணமாகவும், உலகப் பொருளாதாரமே மாறிப்போயுள்ளது. மக்கட்தொகை, நகர்ப்புறமயமாதல் மற்றும் நகர்களுக்கு குடிபெயர்தல் ஆகியவை புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. தட்பவெட்ப மாற்றம் மற்றும் தீவிரவாதம் புதிய கவலைகளை உருவாக்கியுள்ளது. இணைய உலகமும், விண்வெளியும் புதிய வாய்ப்புகளையும் புதிய சவால்களையும் உருவாக்கியுள்ளது. இருப்பினும், நமது அமைப்புகள், அணுகுமுறைகள் மற்றும் நமது சிந்தனைகள், கடந்த நூற்றாண்டில் உள்ளனவே தவிர, வாழும் நூற்றாண்டில் இல்லை. இது குறிப்பாக ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவுக்கு பொருந்தும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள், இந்த பாதுகாப்புக் குழுவை சீர்திருத்த வேண்டியது தற்போது முக்கியமானதும், அவசரமானதுமான ஒரு விஷயமாகியிருக்கிறது.

இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையானது ” உலகில் தற்போது உள்ள சிக்கல்கள், மற்றும் அதிகரித்து வரும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், தீர்வு காணவும், நான்கு நாடுகளின் தலைவர்கள், ஒரு வலுவான பாதுகாப்பு குழு வேண்டும் என்று வலியுறுத்தினர். சர்வதேச அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்தும் பொறுப்பை ஏற்க 21ம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகள் தயாராக உள்ளன என்பதை இத்தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சான் ஜோஸ் நகருக்கு வருகை

பிரதமர், கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகருக்கு வருகை தருகையில், அங்கே வசிக்கும் இந்திய வம்சாவளியினர், உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்திய வம்சாவளியினர் பலரை பிரதமர் சந்தித்தார்.

டெஸ்லா மோட்டார்ஸுக்கு வருகை.

பிரதமர் மோடி நியுயார்க் நகரில் அமைந்துள்ள டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வருகை தந்தபோது, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் அவர்களால் வரவேற்கப்பட்டு, அந்நிறுவனத்தின் பல கண்டுபிடிப்புகளை விளக்கினார். பிரதமர், அந்நிறுவனத்தின் தொழிற்சாலையை பார்வையிட்டார். மறுசுழற்சி எரிசக்தி, டெஸ்லா நிறுவனத்தின் பேட்டரி கார் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி சேமிப்பு முறை ஆகியவை குறித்து அந்நிறுவனத்தின் எலான் மஸ்க் அவர்களுடன் பிரதமர் பேச்சு நடத்தினார். டெஸ்லா நிறுவனத்தில் வேலை செய்யும் பல்வேறு இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் சந்தித்தார்.

ஐடி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் சந்திப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா உரை.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் அவர்களை பிரதமர் சந்தித்து உரையாடினார். அப்போது, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்கு இந்தியா உத்வேகமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் எப்படி பங்கெடுப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மைச்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாடெல்லா, கூகிள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, க்வால்காம் நிறுவனத்தின் பால் ஜேக்கப்ஸ், அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண் மற்றும் சிஸ்கோ நிறுவனத்தின் ஜான் சேம்பர்ஸ் ஆகியோரை சந்தித்து, அவர்களோடு இரவு உணவு அருந்தினார் பிரதமர்.

பின்னர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், டிஜிட்டல் இந்தியாவுக்கான அவரது தொலைநோக்குத் திட்டத்தை எடுத்துரைத்தார். பிரதமர் தனது உரையில், ” சில ஆண்டுகளுக்கு முன்னால் நினைத்தே பார்க்க முடியாத வகையில் மனித வாழ்வை மாற்றுவதற்கான வாய்ப்பு நமக்கு வாய்த்துள்ளது. இதுதான் கடந்த நூற்றாண்டையும் இந்த நூற்றாண்டையும் வேறுபடுத்துகிறது. இன்னமும் கூட சிலர், டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் டிஜிட்டல் பொருளாதாரத்தையும், பணக்காரர்களுக்கானது, படித்தவர்களுக்கானது, வசதி படைத்தவர்களுக்கானது என்று கருதுகிறார்கள். ஆனால், இந்தியாவில் ஒரு மூலையில் இருக்கும் டாக்சி ஓட்டுனரிடம், உங்கள் செல்பேசி மூலமாக என்ன அடைந்தீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். இந்த விவாதம் முற்று பெறும். தொழில்நுட்பத்தை விருப்பத்திற்கும் வாய்ப்புக்கும் இடையே உள்ள தூரத்தை குறைப்பதற்காக பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். சமூக வலைத்தளங்கள், அனைத்து சமூகத் தடைகளையும் உடைத்துள்ளது. சமூக வலைத்தளம், மக்களை மனித மாண்புகளின் அடிப்படையில் இணைக்கிறது. அடையாளத்தினால் அல்ல. அரசியல் அமைப்புச் சட்டங்களில் இருந்து அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டிருந்த ஜனநாயகமும் அதன் குடிமக்களும், இன்று தொழில்நுட்பத்தால் உந்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தினால் கிடைக்கும் விபரங்கள் அரசுகளை 24 மணி நேரத்தில் அல்ல, 24 நிமிடங்களில் பதில் சொல்ல வைக்கிறது. சமூக வலைத்தளங்களின் பிரம்மாண்டமான வளர்ச்சியின் மூலமாக விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வை முன்னேற்ற முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். நண்பர்களே, இந்த நம்பிக்கையிலிருந்து பிறந்ததுதான் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம். மனிதகுல வரலாற்றிலேயே இது வரை இல்லாதது போல, ஒரு மிகப்பெரிய திட்டமாக இதை உருவெடுக்க உள்ளோம். இத்திட்டம் ஏழை, விளிம்புநிலை மக்களின் வாழ்வை மாற்றுவதற்காக மட்டுமல்ல, இந்தியாவின் வாழ்க்கை முறையையே மாற்றுவதற்கான திட்டம் இது.” என்று உரையாற்றினார்.

***