Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்

கலிபோர்னியாவில் 27 செப்டம்பர் 2015 அன்று பிரதமரின் நிகழ்வுகள்


ஃபேஸ்புக்

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஃபேஸ்புக் தலைமையகத்திற்கு சென்று பார்வையிட்டார். டவுன்ஹாலில் நடைபெற்ற கேள்வி பதில் அரங்கில், பேஸ் புக் தலைமை செயல் அலுவலர் திரு. மார்க் சக்கர்பெர்க்கோடு சேர்ந்து பங்கேற்றார்.

கேள்வி பதில் நிகழ்வின் போது, பல்வேறு தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார். இந்தியாவை 20 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் தனது கனவை விவரித்தார். உலக நாடுகள் இந்தியாவின் மீது ஏன் பெரும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ். மார்க் சக்கர்பெர்க்கை இந்தியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியது குறித்து மார்க் கேள்வியெழுப்பியதற்கு பிரதமர் பதலளித்தார். அறிவியல் மற்றும் ஆன்மிகத்துக்கு இடையே உள்ள இணைப்புதான் இது என்று பிரதமர் கூறினார். கடந்த 15 மாதத்திற்க்குள், உலகம் இந்தியாவை பார்க்கும் பார்வையே மாற்றியுள்ளது என்று கூறினார்.

சமூக வலைத்தளங்களும், இணையதளமும் குடிமக்களோடு உரையாடவும், அரசுக்கான ஒரு கருவியாகவும் இருக்குமா என்ற கேள்விக்கு, சமூக வலைத்தளங்கள், மக்களின் கருத்துக்களை நேரடியாக தெரிவிக்க வழிவகை செய்கின்றன என்றார். சீனாவின் வைபோ என்ற சமூக வலைத்தளத்தில் எப்படி சீன மக்களோடு உரையாடினேன் என்றும், இஸ்ரேல் மக்களுக்கு ஹனூக்கா தினத்தன்று ட்விட்டரில் ஹீப்ரூ மொழியில் வாழ்த்து சொன்னதையும், இஸ்ரேல் பிரதமர் அதற்கு எப்படி இந்தியில் பதிலளித்தார் என்பதையும் குறிப்பிட்டார். அண்டை நாடுகளுடனான உறவில் இது ஒரு புதிய கோணம் என்றார்.

தன் பெற்றோர்களைப் பற்றி நா தழு தழுக்க பேசிய பிரதமர், அவரது தாய் சிறிய வயதில் தன் பிள்ளைகளை வளர்க்க எத்தனை சிரமப்பட்டார் என்பதை விளக்கிக் கூறினார். இது ஒரு தாயைப் பற்றிய கதை அல்ல, இந்தியாவில் உள்ள பல்வேறு தாய்மார்களின் வரலாறு என்றும் அவர் கூறினார். அரசு நிர்வாகத்தில் பெண்களின் பங்கை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக கூறினார் பிரதமர்.

கூகுள்

கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு வருகை தந்த பிரதமரை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. சுந்தர் பிச்சை அவர்கள் வரவேற்றார். கூகுளின் கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பிரதமரிடம் சுந்தர் பிச்சை விளக்கினார். கூகுளை உருவாக்கிய திரு.எரிக் ஷ்மிட் மற்றும் திரு.லாரி பேஜ் ஆகியோர் அப்போது உடனிருந்தனர். கூகுள் எர்த் மென்பொருளை பிரமருக்கு அவர்கள் விளக்கிய போது, பிரதமர் காகால் நகரத்தை காண்பிக்குமாறு கேட்டார். பாட்னாவுக்கு அருகே உள்ள காகால் நகரத்தில்தான், விண்வெளி ஆராய்சியாளர் ஆர்யபட்டா அவரது ஆராய்ச்சிக் கூட்டத்தை வைத்திருந்தார்.

மறுசுழற்சி எரிசக்திக்கான கூட்டம்

அமெரிக்க எரிசக்தித் துறை செயலர் திரு எர்னெஸ்ட் மோனிஸ் அவர்களை சந்தித்த பிரதமர், எரிசக்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் அமெரிக்க எரிசக்தித் துறை செயலர் டாக்டர் எர்னெஸ்ட் மோனிஸ் அவர்களும், முன்னாள் எரிசக்தித் துறை செயலர் பேராசிரியர் ஸ்டீவன் ச்சு அவர்களும் பங்கேற்றனர்.

சன் எடிசன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அகமது சட்டில்லா, சாஃப்ட் பேங்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நிகேஷ் அரோரா, ப்ளும் எனர்ஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஜோனாத்தன் வுல்ஃப்ஸன், சோலாஸைம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஜான் டூயர், டிபிஎல் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஐரா எரன்ப்ரீஸ் ஆகியோர் உள்ளிட்ட எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அருண் மஜும்தார், ரோஜர் நோல், அஞ்சனி கோச்சார் மற்றும் சாலி பென்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியா, தூய்மையான மறுசுழற்சி எரிசக்திக்கான ஒரு நாடாக உருவெடுக்கும் தகுதியை பெற்றிருப்பதாக அந்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. மின்சாரத்தை சேமித்து வைக்கும் கருவிகளின் விலை விரைவில் குறைய உள்ளதால், தூய்மையான மறுசுழற்சி எரிசக்தி குறைந்த செலவிலான ஒரு திட்டமாக விரைவில் மாறும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களும், நகரங்களும், தன்னிச்சையாக மறுசுழற்சி எரிசக்தி தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். தற்போது மின்சாரத்தை எடுத்து செல்வதற்கான சாதனங்கள், 175 ஜிகா வாட் மறுசுழற்சி எரிசக்தியை எடுத்துச் செல்ல போதுமானதாக இருக்காது என்பதால், அவ்வாறு எடுத்துச் செல்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். இஸ்ரேல் தன்னுடைய குடிநீர் பற்றாக்குறையை எப்படி தனியார் பங்கெடுப்போடு சரிசெய்ததோ அதே போல இந்தியா இலக்காக வைத்திருக்கும் 175 ஜிகா வாட் மின்சாரத்துக்கும் தனியாரின் பங்கு அவசியமாகும்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், 175 ஜிகா வாட் சுத்தமான எரிசக்தி என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இத்துறையில் முதலீட்டுக்கு அற்புதமான வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர், 100 சதவிகிதம் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்வே துறையை சுட்டிக்காட்டினார். மின் பகிர்மாணத்தை ஒழுங்குபடுத்தவும், மின்பகிர்மாண நிறுவனங்களின் நிதி நிலைமையை சரிசெய்ய முயற்சிகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் பிரதமர்.

மறுசுழற்சி எரிசக்தி முறைகளில் இந்தியா செலுத்தி வரும் கவனத்துக்கு உதாரணமாக, சூரிய ஒளியில் இயங்கும் கொச்சி விமான நிலையத்தையும், குஜராத் மாநிலத்தில் ஒரு கால்வாய்க்கு மேல் நிறுவப்பட்டுள்ள சூரிய ஒளி பேனல்களையும் சுட்டிக்காட்டினார் பிரதமர். ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மாவட்ட நீதிமன்றம் முழுமையாக சூரிய ஒளியில் விரைவில் இயங்க உள்ளது என்றும் தெரிவித்தார். நிலக்கரியை வாயுவாக்குவது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த பிரதமர், அடுத்த பத்தாண்டுகளுக்குள், மறுசுழற்சி எரிசக்தியில் ஒரு புரட்சி நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

கனெக்ட் என்ற புதிய நிறுவனம்

இந்தியாவைச் சேர்ந்தவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு விலாசம் தரும் வகையில் தொடங்கப்பட்ட கனெக்ட் என்ற நிறுவனத்தை மோடி பார்வையிட்டார்.

அந்நிகழ்வில் பிரதமர் அவர்கள் உரையாற்றினார்.

“தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைவு, பல்வேறு துறைகளின் ஒருங்கிணைவு, அனைவருக்கும் பரவலாக்கப்ப்டட தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகளில் மக்கள் காட்டும் ஆர்வம் ஆகியன ஒரு புதிய உலகத்தை திறந்திருக்கிறது. இது சிலிக்கான் பள்ளதாக்கில் பிறந்தது. கலிபோர்னியா உலகை செதுக்குவதைப் போல வேறு எந்த சமூகமும் செதுக்கவில்லை. பெரிய நிறுவனங்கள் அல்ல. பல்வேறு சிறிய நிறுவனங்கள், மனித சமுதாயத்தை மேம்படுத்த பல வகைகளில் உதவி புரிகிறது. அமெரிக்காவின் வெற்றிக்கான காரணமாக இது அமைந்து உலகிற்கே உத்வேகமாக விளங்குகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், இந்தியாவையே மாற்றவும், இந்த புதிய கண்டுபிடிப்புகள் பெருமளவில் உதவி செய்கின்றன. இந்தியா 35 வயதுக்கு குறைந்த 800 மில்லியன் இளைஞர்களை கொண்ட நாடு. அவர்கள் மாற்றத்துக்கு ஆர்வமாக உள்ளனர். அந்த மாற்றத்துக்கான திறமையும் உத்வேகமும் அவர்களிடம் இருக்கிறது. இந்தியாவின் 500 நகரங்கள் பத்து புதிய நிறுவனங்களை தொடங்கினால், இந்தியாவின் 600 ஆயிரம் கிராமங்கள் ஆறு புதிய தொழில்களை தொடங்கினால், அது பொருளாதாரத்தை முன்னேற்றுவதோடு, மிகப்பெரிய வேலை வாய்ப்பையும் உருவாக்கும். இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு உலகம் வேகமாக மாறி வருகிறது. அது இளைஞர்களின் தன்னெழுச்சி, உற்சாகம் மற்றும் சக்தியால் உந்தப்பட்டு வருகிறது.

சிறந்த சுகாதாரம், விவசாயம், மறுசுழற்சி மற்றும் தொழில்நுட்பத்துக்காக பாரத நிதி என்ற ஒரு நிதியத்தை உருவாக்கி, 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் பிரதமர்.

இந்திய வம்சாவளியினரிடையே உரை

சாப் சென்டரில் பிரதமர் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார். இந்திய அமெரிக்க கூட்டுறவு குறித்து பேசிய பிரதமர், இரு நாடுகளிலும் உள்ள தழைத்த ஜனநாயகம் குறித்தும், புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் பேசினார். கடந்த 15 மாதங்களாக இந்த அரசு செய்த சாதனைகள் குறித்து பேசினார். உலகே பெருமைப்படும் வகையில், பெரிய மாற்றங்களை உருவாக்கிய சிலிக்கான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரின் கண்டுபிடிப்புகள் குறித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்.

***