Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்பூரி தாகூர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை


பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா கர்பூரி தாக்கூர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர  மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பீகார் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மக்கள் தலைவராக அவர் தமது வாழ்க்கை முழுவதையும் சமூக நீதிக்காக அர்ப்பணித்து அந்த திசையில் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது வாழ்க்கையும், கொள்கைகளும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”

***

(Release ID: 2095660)

TS/PLM/AG/KR