Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடகாவில் கலபுரகியில் புதிதாக அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு பிரதமர் பட்டா வழங்கினார்

கர்நாடகாவில் கலபுரகியில் புதிதாக அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு பிரதமர் பட்டா வழங்கினார்


கர்நாடகாவில் கலபுரகியில் புதிதாக அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பட்டா வழங்கி, மல்கெத், கலபுரகி ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

திரண்டிருந்த மக்களிடையே பேசிய பிரதமர், ஜனவரி மாதத்தில்தான் இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. சுதந்திர இந்தியாவின் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டது. இந்த புனித ஜனவரி மாதத்தில், கர்நாடக மாநில அரசு சமூக நீதி தொடர்பான மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பஞ்சாரா இன மக்களைச் சேர்ந்த சுமார் 50,000 குடும்பங்களுக்கு முதல்முறையாக நிலப்பட்டா வழங்கப்பட்டது. இதன் மூலம் தண்டா இனமக்கள் வாழும் பகுதிகளில் உள்ள  குடும்பங்களைச் சேர்ந்த மகன்கள் மற்றும் மகள்களுக்கு மிக ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. கலபுரகி, யாத்கிரி, ரெய்ச்சூர், பிடார் மற்றும் விஜயபுரா ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பஞ்சாரா இன மக்களுக்கு பிரதமர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 

சுமார் 3,000-க்கும் மேற்பட்ட தண்டா இனமக்கள் வாழும் பகுதிகளை வருவாய் கிராமங்களாக நிலை உயர்த்திய கர்நாடக மாநில அரசின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார். மேலும் திரு பசவராஜ் பொம்மை அவர்களுக்கும் அவருடைய அமைச்சரவை சகாக்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன் என்றார்.

இந்தப் பகுதிக்கும், பஞ்சாரா இன மக்களோடு தனது தொடர்பு குறித்து நினைவு கூர்ந்த பிரதமர், நமது நாட்டின் மேம்பாட்டிற்காக பஞ்சாரா இன மக்கள் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர் என்றார்.  கடந்த 1994 சட்டமன்ற தேர்தலின் போது, பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் லட்சக்கணக்கான பஞ்சாரா இனமக்கள் பேரணியில் கலந்துகொண்டதை நினைவு கூர்ந்த பிரதமருக்கு, பஞ்சாரா இனத்தைச் சேர்ந்த தாய்மார்களும், சகோதரிகளும் தங்களது பாரம்பரிய உடையில் வந்து ஆசீர்வாதம் வழங்கினர்.

பஞ்சாரா இன மக்களைச் சேர்ந்த தாய்மார்களை நோக்கி, கவலை கொள்ளாதீர்கள்! உங்கள் மகன்களில் ஒருவர் தில்லியில் உங்களுடைய  தேவைகளை நிறைவு செய்து வருகிறார் என்று பிரதமர் கூறினார்.

தண்டா இன மக்கள் வாழும் பகுதிகளை வருவாய் கிராமங்களாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு  அந்த கிராமப்பகுதிகள் மேம்பாடு அடைந்து அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் என்பதை பிரதமர் வலியுறுத்தினார்.

பஞ்சாரா சமுதாயத்தினருக்கான வேலைவாய்ப்பை கர்நாடக அரசு ஏற்படுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். வன உற்பத்தி பொருட்கள், விறகு, தேன், பழங்கள் அல்லது மற்ற தயாரிப்புகள் தற்போது வருவாய் ஆதாரங்களாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.  முந்தைய அரசு வன உற்பத்தியின் சில பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையை அளித்ததாகவும் ஆனால், தற்போது 90-க்கும் மேற்பட்ட வன உற்பத்திப் பொருட்களுக்கு  அது வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கர்நாடக அரசின் நடவடிக்கையால் பஞ்சாரா சமுதாயத்தினர் பயன்பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

சுதந்திரத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக வளர்ச்சியின் பயன்களை  பெரும்பாலான மக்கள் அடைய முடியவில்லை என்றும் அரசின்  உதவி கிடைக்கவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.  தலித் சமுதாயத்தினர், ஒடுக்கப்பட்டோர், பின்தங்கியோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் முதன்முறையாக பலன் அடைந்து வருவதாக கூறினார். அடிப்படை வசதிகள் மிக விரைவாக அவர்களுக்கு கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.  மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தெளிவான திட்டத்துடன் தாங்கள் செயல்பட்டு வருவதாக திரு மோடி  கூறினார்.

சமூகத்தில் மகளிர் நலனை கருத்தில் கொணடு தற்போதைய அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர், அனைத்து துறையிலும் அவர்களுக்கான புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். பழங்குடியினரின் நலன் குறித்து எடுத்துரைத்த பிரதமர், பழங்குடியின சமுதாயத்தினரின் பெருமையை நாடு  அறிந்து கொள்ளும் வகையில் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்கள் நாட்டின் பல்வேறு உயர்ந்த அரசியலமைப்பு பணிகளில் இருப்பதாக கூறினார்.

தமது உரையின் நிறைவாக பேசிய பிரதமர், நீர்நிலைகளை உருவாக்குவதில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் பஞ்சாரா சமுதாயத்தினர் மற்றும் லகா பஞ்சாரா சமுதாயத்தினரின் பங்களிப்பு குறித்து நினைவு கூர்ந்தார். அதே பஞ்சாரா சமுதாயத்தினருக்கு  சேவை புரிவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய இணையமைச்சர் திரு பகவந்த் கூபா, கர்நாடக மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

பின்னணி

அரசின் திட்டங்களை 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக கலபுரகி, யாத்கிரி, ரெய்ச்சூர், பிடார், விஜயபூரா ஆகிய ஐந்து மாவட்டங்களில் சுமார் 1,475 பதிவு செய்யப்படாத குடியிருப்புகள் புதிய வருவாய் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கலபுரகி மாவட்டத்தின் சேடம் தாலுக்காவின் மால்கேட் கிராமத்தில் புதிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த தகுதியுடையப் பயனாளிகளுக்கு பிரதமர் பட்டாக்களை வழங்கினார்.  ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டதன் மூலம் அவர்களுடைய நிலத்திற்கு அரசின் முறையான அங்கீகாரம் கிடைத்துள்ளது.  குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அரசின் சேவைகளைப் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்நிகழ்ச்சியின் போது, என்ஹெச்- 150 சி பிரிவின் 71 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கவும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  இந்த 6 வழி பசுமைச் சாலைத்திட்டம் சூரத்-சென்னை விரைவுச் சாலையின் ஒரு பகுதியாகும்.  இது 2,100 கோடி ரூபாய்க்கும் மேலான செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் சூரத்-சென்னை விரைவுச் சாலை இடம் பெற்றுள்ளது.  இதன் மூலம் தற்போதைய வழித்தடம் 1,600 கிலோ மீட்டரிலிருந்து, 1,270 கிலோ மீட்டராக குறையும்.

***

TV/GS/IR/KPG/RJ/GK