பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2030-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை அடைய இந்திய ரயில்வேக்கு உதவி செய்ய 2023 ஜூன் 14 அன்று இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சர்வதேச வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் , ரயில்வே துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்திய ரயில்வேக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பயன்பாட்டு நவீனமயமாக்கல், மேம்பட்ட எரிசக்தி தீர்வுகள் மற்றும் அமைப்புகள், பிராந்திய எரிசக்தி மற்றும் சந்தை ஒருங்கிணைப்பு, தனியார் துறை பங்கேற்பு மற்றும் ஈடுபாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற குறிப்பிட்ட தொழில்நுட்பப் பகுதிகளை மையமாகக் கொண்ட பயிற்சி, ஆற்றல் செயல்திறன் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான பிற தொடர்புகள், கருத்தரங்குகள் / பட்டறைகளை எளிதாக்குகிறது.
தாக்கம்:
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் டீசல், நிலக்கரி போன்ற இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்திய ரயில்வேக்கு உதவும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) ஆலைகளை நிறுவுவது நாட்டில் இதற்கான தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும். இது உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த உதவும்.
செலவுகள்:
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் சேவைகளுக்கான தொழில்நுட்ப உதவிகள் எஸ்ஏஆர்இபி முன்முயற்சியின் கீழ் யுஎஸ்ஏஐடி நிறுவனத்தால் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதிப் பொறுப்போ எந்த வகையான அர்ப்பணிப்போ இல்லை. இது கட்டுப்பாடற்றது. இதில் இந்திய ரயில்வேயிடமிருந்து எந்த நிதி அர்ப்பணிப்பும் இல்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1993367
————-
(ANU/PKV/SMB/RS/KV