Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கரிமெல்லா பாலகிருஷ்ண பிரசாத் அவர்களின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


கரிமெல்லா பாலகிருஷ்ண பிரசாத் அவர்களின் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கரிமெல்லா பாலகிருஷ்ண பிரசாத்தின் ஆன்மாவைத் தூண்டும் பாடல்கள், எண்ணற்ற இதயங்களைத் தொட்டது, நமது வளமான ஆன்மீக மற்றும் இசை பாரம்பரியத்தை பாதுகாத்து கொண்டாடியது என்று திரு மோடி கூறினார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது::

 

“கரிமெல்லா பாலகிருஷ்ண பிரசாத் அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது. ஆன்மாவைத் தூண்டும் அவரது பாடல்கள் எண்ணற்ற இதயங்களைத் தொட்டன, நமது வளமான ஆன்மீக மற்றும் இசை பாரம்பரியத்தைப் பாதுகாத்து கொண்டாடின. அவர் ஒரு திறமையான இசைக்கலைஞராகவும் இசையமைப்பாளராகவும் நினைவுகூரப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி:பிரதமர் @narendramodi”

 

***

RB/DL