அரசு மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதான “ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்” விருதை வழங்கினார். பிரதமரின் தொலைநோக்கு ராஜதந்திரம், உலக அரங்கில் வளரும் நாடுகளின் உரிமைகளை வென்றெடுத்தல், உலக சமூகத்திற்கு சிறப்பான சேவை, இந்தியா-கயானா உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்தக் கவுரவத்தை இந்திய மக்களுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று உறவுகளுக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். இந்தியா-கயானா இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு தமது அரசுமுறைப் பயணம் ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார்.
கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதைப் பெறும் நான்காவது வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆவார்.
***
(Release ID: 2075293)
TS/PKV/RR/KR
Sincerely thank President Dr. Irfaan Ali, for conferring upon me Guyana's highest honour, 'The Order of Excellence.' This is a recognition of the 140 crore people of India. https://t.co/SVzw5zqk1r
— Narendra Modi (@narendramodi) November 21, 2024