Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஜஸ்டின் ரூடோவுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடல்


கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் லிபரல் கட்சியின் தலைவருமான திரு. ஜஸ்டின் ரூடோவுடன் பித்தமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடினார். கனடாவில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றிப் பெற்றது குறித்து பிரதமர் திரு. ரூடோவிற்கு பாராட்டு தெரிவித்தார். கனடாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்வதற்கான புதிய பொறுப்புகளைப் பெற்றமைக்காக திரு. ரூடோவை பிரதமர் பாராட்டினார்.

கனடா நாட்டில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் தாம் பயணம் மேற்கொண்ட போது திரு. ரூடோவை சந்தித்தது குறித்து பிரதமர் நினைவு கூர்ந்தார். குடியாட்சி, சட்டங்களை போற்றுதல், மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றில் இந்தியாவும் கனடாவும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன என்று பிரதமர் அப்போது குறிப்பிட்டார். கனடாவுடனான உறவுகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுவது மற்றும் உறவுகளை மேலும் பலப்படுத்துவது ஆகியவற்றில் இந்தியா மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் கூறினார்.

பிரதமரின் பாராட்டுதலுக்கு திரு. ரூடோ நன்றி தெரிவித்தார். இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் அரசியல் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் கூட்டுறவை மேம்படுத்தவும் பிரதமருடன் இணைந்து செயல்பட விரும்புவதாக திரு. ரூடோ தெரிவித்தார்.

திரு. ரூடோ இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள பிரதமர் அவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை திரு. ரூடோ ஏற்றுக் கொண்டார். வரவிருக்கும் ஜி-20 மற்றும் சி ஓ பி உச்சி மாநாடுகளில் சந்திக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

****