Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கத்தார் நாட்டு அமீர், பிரதமருக்குத் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்


 கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 

மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த கத்தார் அமீருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்தியா, கத்தார் இடையேயான நட்பு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட உறவுகளை மேலும் வலுப்படுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.

2024 பிப்ரவரியில் கத்தாருக்குத் தாம் மேற்கொண்ட பயனுள்ள பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், விரைவில் இந்தியாவுக்கு வருகை தருமாறு கத்தார் அமீருக்கு அழைப்பு விடுத்தார். 

அமீருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், எதிர்வரும் ஈத் ல் தா பண்டிகையை முன்னிட்டும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2023912)

SMB/IR/AG/RR