Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கத்தார் அமீரை பிரதமர் சந்தித்தார்

கத்தார் அமீரை பிரதமர் சந்தித்தார்


கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை தோஹாவில் உள்ள அமிரி அரண்மனையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

அவருக்கு அமீரி அரண்மனையில் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, இரு தரப்பினரும் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுக்களில் ஈடுபட்டனர். பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடுகள், எரிசக்தி கூட்டாண்மை, விண்வெளி ஒத்துழைப்பு, நகர்ப்புற உள்கட்டமைப்பு, கலாச்சார பிணைப்புகள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த விவாதங்கள் இடம் பெற்றன. பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

கத்தாரில் உள்ள 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய சமுதாயத்தினரின் நலனில் அக்கறை காட்டியதற்காக அமீருக்கு நன்றி தெரிவித்த பிரதமர், கத்தார் உடனான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டிருப்பதாக தெரிவித்தார். விரைவில் இந்தியாவுக்கு வருமாறு அமீருக்கு அழைப்பு விடுத்தார்.

வளைகுடா பிராந்தியத்தில் மதிப்புமிக்க கூட்டாளியாக இந்தியாவின் பங்களிப்புக்கு கத்தார் அமீர் பாராட்டுத் தெரிவித்தார். கத்தாரின் வளர்ச்சியில் துடிப்பான இந்திய சமுதாயத்தின் பங்களிப்பையும், கத்தாரில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் அவர்கள் உற்சாகமாக பங்கேற்றதையும் அமீர் பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து அமீரி அரண்மனையில் பிரதமருக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.

—-

(Release ID: 2006343)

ANU/SM/IR/KPG/KRS