Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கண்ட்லா துறைமுகத்தில் பல்வேறு நல திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்.

கண்ட்லா துறைமுகத்தில் பல்வேறு நல திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்.

கண்ட்லா துறைமுகத்தில் பல்வேறு நல திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்.


குஜராத் மாநிலம் காந்திதாமில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் பல்வேறு நல திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் கருத்தரங்கு மையம் மற்றும் 14-வது, 16-வது பொது சரக்கு தளம் அமைப்பதற்கான கல்வெட்டை பிரதமர் திறந்துவைத்து அடிக்கல் நாட்டினார்.

கட்ச் உப்பங்களியில் இடைமாற்றுச்சந்தியுடனான சாலை பாலங்களை கட்டுதல்; இரண்டு நடமாடும் துறைமுக கிரேன்களை நிறுவுதல்; கண்ட்லா துறைமுகத்தில் உரங்களை கையாளுவதை இயந்திரமயமாக்கல் ஆகியவற்றிற்கான ஒப்புதல் கடிதங்களை பிரதமர் ஒப்படைத்தார்.

இந்த விழாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி சாகர்மாலா திட்டமும், துறைமுகம் மூலமான வளர்ச்சியும் குஜராத் மாநிலத்திற்கு பெரும் நன்மையை அளிக்கும். மேலும் இது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

குஜராத் மாநிலத்தின் சிறந்த கடல்சார் பாரம்பரியத்தை பற்றி கூறிய குஜராத் மாநில முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, குஜராத்தின் அந்த பாரம்பரியமும் ஈடுபாடும் இன்றளவும் தொடர்வதாக கூறினார்.

ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து நிகழ்ச்சி அரங்கத்திற்கு வரும்வரை தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்காக பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கட்ச்சில் உள்ள மக்கள் நீரின் முக்கியத்துவத்தை நன்கு அறிவார்கள் என்று கூறிய பிரதமர் கட்ச் பகுதியின் வளமையான வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்து பேசினார்.
உலக வர்த்தகத்தில் இந்தியா தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்றால் துறைமுகங்களில் சிறந்த மேம்பாடுகள் அவசியமாகும் என்று பிரதமர் கூறினார்.

துறைமுகங்களின் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதி மற்றும் திறமையான செயல்பாடுகள் அவசியம் என்று கூறிய பிரதமர் கண்ட்லா துறைமுகம் ஆசிய கண்டத்தில் உள்ள சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஈரான் நாட்டில் உள்ள இந்தியர்களின் உதவியோடு காட்டப்படும் சபஹார் துறைமுகம் கண்ட்லா துறைமுகத்தின் வளர்ச்சியை மேலும் பேருக்கும். டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் கருத்தரங்கு மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது குறித்தும் பிரதமர் பேசினார்.

அடுத்து ஐந்து ஆண்டுகளில் நாம் நாட்டின் எழுபத்தி ஐந்தாவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் அவர்களின் நூற்றாண்டு விழாவை நம் தேசம் கொண்டாட உள்ள நிலையில் கண்ட்லா துறைமுகத்தின் பெயரை “தீன்தயாள் துறைமுகம் – கண்ட்லா” என்று மாற்றலாம் என்று பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.