குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME)துறையை வலுப்படுத்தும் அரசின் முயற்சிகளில் ஒரு பகுதியாக கடன் உத்தரவாதத் திட்டத்தை மறுசீரமைப்பது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கான(MSME )மத்திய அமைச்சர் திரு நாராயண் ரானே ட்விட்டரில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்(MSE)துறையை வலுப்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSES) அளிக்கப்படும் கடன் அளவை அதிகரிக்க கடன் உத்தரவாதத் திட்டம் மேலும் மறுசீரமைக்கப் பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர்,
“இது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையை வலுப்படுத்தும் நமது அரசின் முயற்சிகளில் ஒரு பகுதி.” என்று தெரிவித்துள்ளார்.
—–
AP/JL/KPG
This is a part of our Government's efforts to strengthen the MSME sector. https://t.co/EWdEZeNCVA
— Narendra Modi (@narendramodi) April 4, 2023