Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓமன் சுல்தானுடன் பிரதமர் சந்திப்பு

ஓமன் சுல்தானுடன் பிரதமர் சந்திப்பு


ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி  இன்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆய்வு செய்தார்.

வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு, புத்தாக்கம் மற்றும் பலவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“ஓமன் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. இருதரப்பு உறவுகளின் முழு வரம்பை ஆய்வு செய்த நாங்கள், வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு, கண்டுபிடிப்பு மற்றும் பலவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தோம்.”

*******

ANU/PKV/SMB/DL