Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓக்கி புயல் பாதித்த லட்சத்தீவு, தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளுக்கு பிரதமர் நாளை வருகை புரிகிறார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி லட்சத்தீவு யூனியன் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாளை வருகைபுரிகிறார்.  ஓக்கி புயல் ஏற்படுத்திய சேதத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலவரங்களை அவர் ஆய்வு செய்கிறார்.  கவரட்டி, கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்தில் நிவாரணப்பணிகளை பார்வையிடுவதோடு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்கிறார். அத்தோடு புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்.

நவம்பர் மாத இறுதியிலும் டிசம்பர் மாத தொடக்கத்திலும் ஓக்கி புயல் கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

பிரதமர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரிடமும் அவர் பேசினார்.
பாதுகாப்பு அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தேசிய அவசரநிலை மேலாண்மைக் குழு (என்.சி.எம்.சி.) அமைச்சரவை செயலர் திரு. பி.கே. சின்ஹா தலைமையில் டிசம்பர் 4ந்தேதி கூடியத். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஆய்வு செய்தது.

மத்திய மற்றும் மாநில துறைகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.  கடலோர காவல்படை, விமானப்படை, கடற்படை, என்.டி.ஆர்.எஃப் மற்றும் உள்ளூர் அரசு துறைகளும் தேடுதல் பணியிலும், மீட்புப்பணியிலும் ஈடுபட்டன. 2017-2018 ஆண்டுக்கான கேரள, தமிழக அரசுகளின் ஓக்கி புயல் நிவாரணப்பணிகளுக்கு கைகொடுக்கும் வகையில் மாநில பேரிடர் மீட்பு தொகையில் இரண்டாவது தவணைத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநில பேரிடர் மீட்பு தொகையில் மத்திய அரசின் பங்கானது கேரளாவுக்கு 153கோடி ரூபாயும், தமிழகத்திற்கு 561கோடி ரூபாயும் ஆகும்.  

ஓக்கி புயலின் வேகம் டிசம்பர் 5ந்தேதி தணிந்ததும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அனைவரையும் டுவிட்டர் மூலம் பாராட்டினார். பல்வேறு மத்திய அரசு முகமைகள், மாநில அரசுகளின் முகமைகள், உள்ளூர் நிர்வாகத்தினர் மற்றும் விழிப்புடன் செயல்பட்ட குடிமக்களை அவர்களது குறிப்பிடத்தக்க தயார் நிலை மற்றும் உதவிக்காக பாராட்டினார்.

முன்னதாக அவர் அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் என்று தனது டுவீட்டுகள் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு உறுதியளித்து இருந்தார். புயல் நிவாரணத்தில் உதவி புரியுமாறு சக குடிமக்களை அவர் தொடர்ந்து ஊக்கப்படுத்தியிருந்தார்.