ஒற்றுமையின் மகா யாகம் என்று மகா கும்பமேளாவை பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா அதன் பாரம்பரியத்திற்காகப் பெருமிதம் கொள்வதாகவும், புதிய சக்தியுடன் முன்னோக்கிச் செல்வதாகவும் இன்று குறிப்பிட்டுள்ளார். நாட்டின் புதிய எதிர்காலத்தை எழுதுவதற்குத் தயாராகும் மாற்றத்தின் சகாப்தத்திற்கு இது விடிவெள்ளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மகா கும்பமேளாவில் பேரளவு எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்றது சாதனையாக மட்டுமல்லாமல், நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் வலுவாக, வளமாக பல நூற்றாண்டுகளுக்கும் பாதுகாப்பதற்கு வலுவான அடித்தளத்தையும் அமைத்து தந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஒற்றுமையின் மகா கும்பமேளா வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது குறித்து திருப்தி தெரிவித்திருப்பதோடு, இதற்காக மக்களின் கடின உழைப்பு, முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தும் தனது எண்ணங்களை திரு மோடி வலைப்பக்கத்தில் பதிவிட்டும் எக்ஸ் தளத்திலும் பகிர்ந்துள்ளார்.
“மகா கும்பமேளா நிறைவடைந்துள்ளது. ஒற்றுமையின் மகா யாகம் நிறைவடைந்துள்ளது. பிரயாக்ராஜில் 45 நாட்களும் மகா கும்பமேளாவில் ஒரே நேரத்தில் ஒரே விழாவில் 140 கோடி மக்களின் நம்பிக்கை ஒன்றாக வெளிப்பட்டுள்ளது, இது உண்மையில் வியக்கத்தக்கதாகும்! மகா கும்பமேளா நிறைவடைந்த பின் என் மனதில் எழுந்த எண்ணங்களை எழுதுவதற்கு நான் முயற்சி செய்துள்ளேன்…”
“மகா கும்பமேளாவில் பேரளவு எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்றது சாதனையாக மட்டுமல்லாமல், நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் வலுவாக, வளமாக பல நூற்றாண்டுகளுக்கு பாதுகாப்பதற்கு வலுவான அடித்தளத்தையும் அமைத்து தந்துள்ளது.”
“பிரயாக்ராஜின் மகா கும்பமேளா உலகம் முழுவதும் உள்ள நிர்வாகத் தொழில்முறையாளர்கள், திட்டமிடல் மற்றும் கொள்கை வகுக்கும் நிபுணர்கள் ஆகியோருக்கு ஆய்வுக்கான விஷயமாகவும் மாறியுள்ளது.”
“இந்தியா இன்று அதன் பாரம்பரியத்தில் பெருமிதம் கொண்டு புதிய சக்தியுடன் முன்னேறுகிறது. புதிய சகாப்தத்தின் குரலான இது நாட்டிற்கான புதிய எதிர்காலத்தை எழுதவிருக்கிறது.”
“சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும், அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மக்கள் மகா கும்பமேளாவில் இணைந்துள்ளனர். ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற இந்த மறக்க முடியாத காட்சி, நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் மாபெரும் தன்னம்பிக்கை விழாவாக மாறியுள்ளது.”
“ஒற்றுமையின் மகா கும்பமேளாவை வெற்றிகரமாக்கிய நாட்டு மக்களின் கடின உழைப்பு, முயற்சிகள், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். 12 ஜோதி லிங்கங்களில் முதலாவது ஜோதி லிங்கமான ஸ்ரீ சோமநாதரை நான் தரிசிக்க உள்ளேன். பக்தியின் அடையாளமாக எனது சங்கல்ப மலரை காணிக்கையாக்கி இந்தியர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வேன். இடையூறு இல்லாத ஒற்றுமை நீரோட்டம் இதே போல் நாட்டு மக்களிடம் தொடர நான் வாழ்த்துகிறேன்.”
***
(Release ID: 2106528)
TS/SMB/RR
महाकुंभ संपन्न हुआ...एकता का महायज्ञ संपन्न हुआ। प्रयागराज में एकता के महाकुंभ में पूरे 45 दिनों तक जिस प्रकार 140 करोड़ देशवासियों की आस्था एक साथ, एक समय में इस एक पर्व से आकर जुड़ी, वो अभिभूत करता है! महाकुंभ के पूर्ण होने पर जो विचार मन में आए, उन्हें मैंने कलमबद्ध करने का… pic.twitter.com/TgzdUuzuGI
— Narendra Modi (@narendramodi) February 27, 2025
समाज के हर वर्ग और हर क्षेत्र के लोग इस महाकुंभ में एक हो गए। ये एक भारत श्रेष्ठ भारत का चिर स्मरणीय दृश्य करोड़ों देशवासियों में आत्मविश्वास के साक्षात्कार का महापर्व बन गया।
— Narendra Modi (@narendramodi) February 27, 2025
एकता के महाकुंभ को सफल बनाने के लिए देशवासियों के परिश्रम, उनके प्रयास, उनके संकल्प से अभीभूत मैं द्वादश ज्योतिर्लिंग में से प्रथम ज्योतिर्लिंग, श्री सोमनाथ के दर्शन करने जाऊंगा। मैं श्रद्धा रूपी संकल्प पुष्प को समर्पित करते हुए हर भारतीय के लिए प्रार्थना करूंगा। मैं कामना करूंगा…
— Narendra Modi (@narendramodi) February 27, 2025