அதிபர் மேக்ரோன் அவர்களே,
பெரியோர்களே,
வணக்கம் !
கடல்களுக்கான இந்த உலகளாவிய முக்கிய முன் முயற்சிக்கு அதிபர் மேக்ரோனை நான் பாராட்டுகிறேன்.
இந்தியா எப்போதும் கடல் சார்ந்த நாகரிகமாக இருந்துள்ளது.
கடல் சார்ந்த வாழ்க்கை உள்ளிட்ட கடல்களின் பரிசுகள் பற்றி எங்களின் தொன்மையான நூல்களும், இலக்கியங்களும் பேசுகின்றன.
இன்று நமது பாதுகாப்பும், வளமும் கடல்களோடு இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் “இந்திய- பசிஃபிக் கடல்கள் முன்முயற்சி” கடல் சார்ந்த வளங்களை முக்கிய அம்சமாகக் கொண்டுள்ளது.
“தேசிய எல்லை வரம்புக்கு அப்பால் பல்லுயிர் பெருக்கம் குறித்த உயர் லட்சிய கூட்டணி” என்ற பிரான்சின் முன்முயற்சியை இந்தியா ஆதரிக்கிறது.
இந்த ஆண்டில் சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் சர்வதேச ஒப்பந்தத்திற்கு நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.
கடற்கரை பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களையும், இதர கழிவுகளையும் அப்புறப்படுத்தும் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கத்தை இந்தியா அண்மையில் மேற்கொண்டது.
மூன்று லட்சம் இளைஞர்கள் ஏறத்தாழ 13 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.
கடல்களில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற இந்த ஆண்டு 100 நாட்களை ஒதுக்குமாறு எங்கள் கடற்படைக்கும் நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து உலகளாவிய முன்முயற்சியை தொடங்கும் பிரான்சுடன் இணைவதற்கு இந்தியா மகிழ்ச்சி அடைகிறது.
அதிபர் மேக்ரோன் அவர்களுக்கு நன்றி.
***************