Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டம் நமது முன்னாள் ராணுவ வீரர்களின் தைரியம் மற்றும் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் திட்டமாகும்; பிரதமர்


ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் 10 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த நமது மூத்த படை வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் தைரியம் மற்றும் தியாகத்திற்கு மரியாதை செலுத்துவதாகக் கூறியுள்ளார். இந்த நீண்டகாலக் கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்கும், நமது நாயகர்களுக்கு நமது தேசத்தின் நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் ஒரே ஓய்வூதியத்தை செயல்படுத்துவதற்கான முடிவு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். நமது ஆயுதப்படைகளை வலுப்படுத்தவும், நமக்கு சேவை செய்பவர்களின் நலனை மேம்படுத்தவும் அரசு எப்போதும் சாத்தியமான அனைத்தையும் செய்யும் என்று திரு மோடி உறுதியளித்துள்ளார்.

 

சமூக ஊடக ‘எக்ஸ்’ தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது:

“இந்த நாளில், #OneRankOnePension (ஓஆர்ஓபி) செயல்படுத்தப்பட்டது. இது நமது தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த நமது மூத்த வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் தைரியம் மற்றும் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவதாக அமைந்தது. ஒரு பதவி ஒரே ஓய்வூதியத்தை செயல்படுத்துவதற்கான முடிவு இந்த நீண்டகால கோரிக்கையைப் பூர்த்தி செய்வதற்கும், நமது நாயகர்களுக்கு நமது தேசத்தின் நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.”

“இந்த தசாப்தத்தில், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இந்த மைல்கல் முயற்சியால் பயனடைந்துள்ளனர் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. எண்ணிக்கையைத் தாண்டி, நமது ஆயுதப்படைகளின் நல்வாழ்வுக்கான அரசின் உறுதிப்பாட்டை ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் பிரதிபலிக்கிறது. நமது ஆயுதப்படைகளை வலுப்படுத்தவும், நமக்கு சேவை செய்பவர்களின் நலனை மேம்படுத்தவும் நாங்கள் எப்போதும் சாத்தியமான அனைத்தையும் செய்வோம். #OneRankOnePension”

—-

(Release ID 2071380)

AD/PKV/KPG/KR