Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் தூய்மையான தாவரங்கள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் முன்மொழிந்த தூய்மையான தாவரத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

ரூ.1,765.67 கோடி கணிசமான முதலீட்டுடன், இந்த முன்னோடி முயற்சி, இந்தியாவில் தோட்டக்கலைத் துறையில் புரட்சியை ஏற்படுத்த உள்ளதுடன், சிறப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான புதிய தரங்களை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 2023 இல் நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் இது  அறிவிக்கப்பட்டது, 

வைரஸ் இல்லாத, உயர்தர நடவுப் பொருட்களுக்கான அணுகலை இது வழங்கும். இது பயிர் விளைச்சல் மற்றும் மேம்பட்ட வருமான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.

நெறிப்படுத்தப்பட்ட சான்றிதழ் செயல்முறைகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவு ஆகியவை நாற்றங்கால்களை சுத்தமான நடவுப் பொருட்களை திறம்பட பரப்பவும், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் உதவும்.

வைரஸ்கள் இல்லாத சிறந்த தயாரிப்புகளிலிருந்து நுகர்வோர் பயனடைவதை இந்த முயற்சி உறுதி செய்யும். பழங்களின் சுவை, தோற்றம் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை இது மேம்படுத்துகிறது.

உயர்தர, நோய் இல்லாத பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம், இந்தியா ஒரு முன்னணி உலகளாவிய ஏற்றுமதியாளராக தனது நிலையை வலுப்படுத்தும், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும். சர்வதேச பழ வர்த்தகத்தில் அதன் பங்கை அதிகரிக்கும்.

நில உடைமையின் அளவு அல்லது சமூக பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், அனைத்து விவசாயிகளுக்கும் சுத்தமான தாவரப் பொருட்களுக்கான மலிவு அணுகலுக்கு இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கும்.

இத்திட்டம் பெண் விவசாயிகளை அதன் திட்டமிடல் மற்றும் அமலாக்கத்தில் தீவிரமாக ஈடுபடுத்தும், வளங்கள், பயிற்சி மற்றும் முடிவெடுக்கும் வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும்.

பிராந்திய வாரியான தூய்மையான தாவர வகைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாறுபட்ட வேளாண் – காலநிலை நிலைமைகளை இந்த திட்டம் நிவர்த்தி செய்யும்.

*****

PKV/DL