Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“ஒருங்கிணைந்த இந்தியா: சர்தார் பட்டேல்” கண்காட்சியை பிரதமர் துவக்கிவைத்தார்

“ஒருங்கிணைந்த இந்தியா: சர்தார் பட்டேல்” கண்காட்சியை பிரதமர் துவக்கிவைத்தார்

“ஒருங்கிணைந்த இந்தியா: சர்தார் பட்டேல்” கண்காட்சியை பிரதமர் துவக்கிவைத்தார்


புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த “ஒருங்கிணைந்த இந்தியா: சர்தார் பட்டேல்” என்ற டிஜிட்டல் கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று துவக்கிவைத்தார்.

“ஒன்றுபட்ட இந்தியா – ஒப்பற்ற இந்தியா” என்ற முன்முயற்சியையும் பிரதமர் இன்று தொடங்கிவைத்தார். இந்த முன்முயற்சி மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை குறித்து விழிப்புணர்வு பெறுவர். இதன் மூலம் வேற்றுமையில் ஒற்றுமை எனும் உணர்வு மேலும் வலுவடையும். இந்த நிகழ்ச்சியின்போது, இந்த முன்முயற்சியின் கீழ் இரு மாநிலங்களுக்கு இடையே சுமார் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்த விழாவில் பேசிய பிரதமர், நம் நாட்டிற்கு எண்ணற்ற சேவைகள் செய்த சர்தார் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்தினார். இது போன்ற மாபெரும் தலைவர்களை என்றும் நம்மால் மறக்க முடியாது என்று பிரதமர் கூறினார்.

அரசர்களால் ஆளப்பட்ட மாநிலங்களை ஒன்றுபடுத்தி ஒரே நாடாக சேர்த்ததில் சர்தார் பட்டேலின் பங்கு குறித்து பிரதமர் மோடி விரிவாக பேசினார்.

மேலும், “ஒன்றுபட்ட இந்தியா – ஒப்பற்ற இந்தியா” முயற்சி எவ்வாறு பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களிடையேயான பந்தத்தை வலுப்படுத்தும் என்று பிரதமர் எடுத்துரைத்தார்.