Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒப்பந்தங்களின் பட்டியல்: பிரதமரின் குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)

ஒப்பந்தங்களின் பட்டியல்: பிரதமரின் குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)


01

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை நிறுவனப்படுத்தும். பயிற்சி, பணியாளர்கள் மற்றும் நிபுணர்கள் பரிமாற்றம், கூட்டு பயிற்சிகள், பாதுகாப்பு தொழில்துறையில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகியவை  இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்களாகும்.

02

இந்தியா மற்றும் குவைத் இடையே 2025-2029 ஆண்டுகளில் கலாச்சார பரிமாற்ற திட்டம் .

கலை, இசை, நடனம், இலக்கியம், நாடகம் ஆகியவற்றில் கலாச்சார பரிமாற்றங்கள், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு, கலாச்சாரத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் விழாக்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றிற்கு கலாச்சார பரிமாற்ற திட்டம் வழிவகுக்கும்.

03

விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதற்கான திட்டம்

(2025-2028)

இந்தியா மற்றும் குவைத் இடையேயான விளையாட்டுத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், விளையாட்டுத் தலைவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, விளையாட்டுத் துறையில் நிகழ்ச்சிகள்  மற்றும் திட்டங்களில் பங்கேற்பது, விளையாட்டு மருத்துவம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு ஊடகம், விளையாட்டு அறிவியல் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்வது ஆகியவை இதில் அடங்கும்.

04

சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் குவைத் உறுப்பினர்.

சர்வதேச சூரியசக்தி கூட்டணி, கூட்டாக சூரிய சக்தியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. உறுப்பு நாடுகளுக்கு குறைந்த கார்பன் வளர்ச்சிப் பாதைகளை உருவாக்க உதவும் வகையில் சூரிய சக்தியின் பயன்பாட்டை அளவிடுவதற்கான முக்கிய பொதுவான சவால்களை இது நிவர்த்தி செய்கிறது.

வ.எண்

புரிந்துணர்வு ஒப்பந்தம்/உடன்படிக்கை

குறிக்கோள்

*****

PKV/KV