Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசா மாநிலம் சந்திக்கும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து ஒடிசா முதலமைச்சருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனை

s2016052183668


ஒடிசா மாநிலத்தின் பலபகுதிகளில் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஒடிசா முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்திய அரசின் மூத்த அதிகாரிகளும் ஒடிசா மாநில அரசின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

ஒடிசா மாநிலம் செலுத்த வேண்டிய தொகையை சரிசெய்தபின் தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.600.52 கோடி அந்த மாநிலத்திற்கு அனுமதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக 2015-16ம் ஆண்டுக்கு மேலும் ரூ.560.25 கோடி ஒதுக்கப்பட்டது. 2016-17ம் ஆண்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு முதல் தவணையாக மேலும் ரூ.294.375 கோடியும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தண்ணீர் சேமிப்பு முயற்சியாக ஒடிசா மாநிலம் 25000 பண்ணைக் குட்டைகளையும் 7000 தடுப்பனைகளையும் நீரைத் திருப்பிவிடும் 4000 கரைகளையும் 4000 கசிவுநீர் குட்டைகளையும் 400 நீர் சேமிப்பு கட்டுமானங்களையும் 350 சமுதாய குளங்களையும் நிர்மாணித்துள்ளது.

பிரதம மந்திரி நீர்பாசனத் திட்டத்தின் பகுதியாக மாநிலத்தின் 30 மாவட்டங்களிலும் பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். பாசனத் திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதில் மாநில அரசின் உறுதியை அவர் வலியுறுத்தினார்.

இதர விவசாயத் திட்டங்களின் முன்னேற்றம், குழாய் மூலம் தண்ணீர் வழங்குதல், கிராமப் புறங்களுக்கு வங்கி சேவை வசதியை விரிவாக்குதல் ஆகிய அம்சங்களும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து இதில் பணியாற்றுவது என்ற உறுதியுடன் கூட்டம் நிறைவுற்றது.