Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசா மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினர் பட்டியலில் மாற்றம் செய்வதற்கான (i) 1950­ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பிரிவினர் அரசியல் சட்ட ஆணை திருத்தத்திற்கும் (ii) பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் பெயரை புதுச்சேரி என்று மாற்றுவதற்கான 1964­ம் ஆண்டு அரசியல் சட்ட புதுச்சேரி தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஆணையின் திருத்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


ஒடிசா மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினர் பட்டியலில் மாற்றம் செய்வதற்கான (i) 1950­ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பிரிவினர் அரசியல் சட்ட ஆணை திருத்தத்திற்கும் (ii) பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் பெயரை புதுச்சேரி என்று மாற்றுவதற்கான 1964­ம் ஆண்டு அரசியல் சட்ட புதுச்சேரி தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஆணையின் திருத்தத்திற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அரசியல் சாசன தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஆணை திருத்த மசோதா 2017 என்று பெயர்கொண்ட இந்த மசோதா மேலே குறித்த மாற்றங்களை இணைப்பதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

ஒடிசாவில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் பட்டியலில் சாபாகியா இனம் வரிசை எண் 79­ல் இடம்பெற்றுள்ளது. இதே பொருள்கொண்ட சுவால்கிரி, ஸ்வால்கிரி இனங்களை ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி சாபாகியா இனத்தின் வேறு பெயர்களாக இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டது. மேலும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின பெயரை பாண்டிச்சேரி என்பதற்கு பதிலாக புதுச்சேரி என 2006­ம் ஆண்டு பாண்டிச்சேரி பெயர்மாற்ற 01.10.2006 முதல் சட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது. இவற்றுக்கேற்ப 1964 ம் ஆண்டு அரசியல் சட்ட புதுச்சேரி தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஆணையில் திருத்தம் அவசியமாகிறது.

தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடியினர் பட்டியலில் மாற்றங்கள் செய்வதற்கு உத்தேசிக்கும்போது ஜூன் 1999 நடைமுறைகளிலும் பின்னர் திருத்தம் செய்யப்பட்ட 2002 ஜூன் நடைமுறைகளிலும் மாற்றத்திற்கு அரசு அனுமதி வழங்கியது. ஒப்புதல் வழங்கப்பட்ட நடைமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட அரசியல் சட்ட ஆணைகளை திருத்த சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் இதற்கான திட்டங்கள் இந்திய தலைமை பதிவாளர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் தேசிய ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெற்றிருக்கும் நிலையில் ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய அரசியல் சட்டம் 341வது பிரிவின்படி அறிவிக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட பிரிவு உறுப்பினர்களுக்கு சில சலுகைகளையும், உரிமைகளையும இந்திய அரசியல் சட்டம் வழங்குகிறது. முதலில தாழ்த்தப்பட்ட பிரிவினர் பட்டியல் சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் தொடர்பாக குடியரசுத் தலைவரின் அறிவிக்கையின்படியான ஆணையில் வெளியிடப்படவேண்டும். இந்த ஆணை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்கள் ஆலோசனையின்பேரில் பிறப்பிக்கப்படும். தாழ்த்தப்பட்ட பிரிவினர்களுக்கான இந்த பட்டியலில் பின்னர் சேர்க்கையோ அல்லது நீக்கமோ செய்யப்படவேண்டுமானால், அரசியல் சட்டம் சரத்து 341 பிரிவு 2ன்படி நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் செய்துக் கொள்ளலாம்.

பல்வேறு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவினரை குறிப்பிடுவதற்கான ஆறு குடியரசுத்தலைவர் ஆணைகள் 1950 முதல் 1978வரை பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆணைகள் அரசியல் சட்டத்தின் பிரிவு 341(2)ன் படி, அவ்வப்போது நாடாளுமன்ற சட்டங்களின் மூலம் 1956க்கும் 2016க்கும் இடையே திருத்தி வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்ட பிறகு, இதில் சேர்க்கப்படும் இனத்தின் உறுப்பினர்கள் தற்போதுள்ள திட்டங்களின்படி தாழ்த்தப்பட்ட பிரிவினரை பலன்களை பெற இயலும். இந்த வகையில் சேர்க்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்களில் சில­ பத்தாம் வகுப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை, தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை. ராஜீவ்காந்தி தேசிய ஃபெலோஷீப் உதவித்தொகை, உயர்தரமான கல்வி, தேசிய ஷெட்யூல்டு வகுப்பு நிதி மேம்பாட்டு கழகத்தின் சலுகை கடன்கள், தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவ, மாணவியருக்கு விடுதிகள். இவற்றுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்களிலும் கல்வி நிறுவனங்கள் இடங்களிலும் இடஒதுக்கீட்டு பலன்களுக்கும் இவர்கள் உரிமை பெறுகிறார்கள்.