Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசா மருத்துவமனை தீ விபத்து: பிரதமர் வேதனை


ஒடிசா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் நேர்ந்த தீ விபத்தில் பலர் உயிரிழந்தது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வேதனையைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோருக்கும், காயமடைந்தோருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

“ஒடிசா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த வேதனைப்படுகிறேன். இந்தத் துயர சம்பவம் மனத்தை உலுக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களை எண்ணி மனம் கவலைப்படுகிறது”

தீவிபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்களை தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டாவைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். காயமடைந்தோர் விரைவில் குணமடைவர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன், பெட்ரோலியத் துறை இணையமைச்சர் திரு. தர்மேந்திர பிரதானுடன் பேசிய பிரதமர் திரு. மோடி, காயமடைந்தோருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் இயன்ற உதவிகளை உறுதி செய்யும்படியும் கேட்டுக் கொண்டார்.

ஒடிசா மாநில முதல்வர் திரு. நவீன் பட்நாயக்குடன் பேசிய பிரதமர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தனது வேதனையைத் தெரிவித்தார். மேலும், என்ன உதவிகளைச் செய்ய இயலுமோ அவற்றையெல்லாம் மத்திய அரசு செய்யும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.