Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசாவில் புதிதாக கட்டப்பட்ட ஐஐடி புவனேஸ்வர் தொடக்க விழா, ஐஐஎஸ்இஆர் (இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) அடிக்கல் நாட்டு விழா மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

ஒடிசாவில் புதிதாக கட்டப்பட்ட ஐஐடி புவனேஸ்வர் தொடக்க விழா, ஐஐஎஸ்இஆர் (இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) அடிக்கல் நாட்டு விழா மற்றும்  பல்வேறு வளர்ச்சித் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

ஒடிசாவில் புதிதாக கட்டப்பட்ட ஐஐடி புவனேஸ்வர் தொடக்க விழா, ஐஐஎஸ்இஆர் (இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) அடிக்கல் நாட்டு விழா மற்றும்  பல்வேறு வளர்ச்சித் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

ஒடிசாவில் புதிதாக கட்டப்பட்ட ஐஐடி புவனேஸ்வர் தொடக்க விழா, ஐஐஎஸ்இஆர் (இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) அடிக்கல் நாட்டு விழா மற்றும்  பல்வேறு வளர்ச்சித் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்


இன்று இங்கு கூடியிருக்கும் சகோதரர்களே, சகோதரிகளே, என் இளம் நண்பர்களே!
ஒடிசாவின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென நாங்கள் ஏற்றுக் கொண்ட தீர்மானம், இன்று மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, ரூ .14 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள பல திட்டங்கள் தொடங்கப்பட்டும், அடிக்கல் நாட்டப்பட்டும் உள்ளன. இதில் கல்வி, சுகாதாரம், எரிவாயு, சாலைகள் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அடங்கும். இந்த திட்டங்கள் அனைத்தும், ஒடிசாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதுடன், ஒடிசாவில் வாழும் ஒவ்வொருவரின் வாழ்க்கையை சிறப்பானதாகவும், எளிதாகவும் மாற்றும். இந்த அனைத்து அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் ஒடிசா மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,

ஒடிசா உட்பட கிழக்கு இந்தியாவுக்கு மத்திய அரசு இத்தகைய கவனம் செலுத்தி திட்டங்களை நிறைவேற்றி வைப்பது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை. நாட்டின் சீரான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக உள்கட்டமைப்பு மற்றும் முக்கியமான வசதிகளுக்காக பல திட்டங்கள் தொடர்ச்சியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவிற்கான நுழைவாயிலாக கிழக்கு இந்தியாவை மேம்படுத்துவதை நோக்கி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

‘ஒன்றிணைவோம், வளர்ச்சி காண்போம்’ என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு நபரையும் மேம்படுத்தும் தீர்மானத்துடன் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

இன்று, நான் ஒடிசாவுக்கும் அதன் இளைஞர்களுக்கும் இந்த ஐஐடி புவனேஸ்வரை அர்ப்பணிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இந்த கட்டடத்தைக் கட்டி முடிக்க ரூ.1260 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட வளாகம், ஒடிசா இளைஞர்களுக்கான கனவுகளின் மையமாக மட்டுமல்லாமல், அந்த இளைஞர்களின் வருமானத்திற்கான ஒரு புதிய வழிவகையாகவும் இருக்கும். ஒடிசாவில் ஐஐடி வளாகம் அமைந்துள்ளதால், இனி ஒடிசா காடுகளின் வளமான வளங்களை ஆய்வு செய்ய முடியும். பழங்குடி இனச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்வை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இந்தக் கல்வி நிறுவனம், சிறந்த தரமான பொறியாளர்களையும், தொழில் முனைவோர்களையும் உற்பத்தி செய்து, ஒடிசாவை உயர்தர தொழில்துறை மேம்பாட்டுப் பாதைக்கு கொண்டு செல்லும். வரும் நாள்களில், பெர்ஹம்பூரில் ரூ.16000 கோடிசெலவில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவும் பணிகளும் தொடங்கும்.

நண்பர்களே,

கடந்த நான்கரை ஆண்டுகளில், நாடு முழுவதும் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பல கல்வி நிறுவனங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது புதிய இந்தியாவுக்கான எமது அரசின் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடு ஆகும். இதன் மூலம் இந்தியாவை, உலகின் நவீன தொழில்நுட்பத்தின் மையமாகவும், தொடக்க நிலையமாகவும் மாற்ற முயற்சிக்கின்றோம். இந்தப் புதிய நிறுவனங்கள், பழமையான அடையாளங்களுடன் உள்ள ஒடிசாவை புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவாற்றலின் மையமாக வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். நண்பர்களே, கல்வியைத் தவிர, மக்களின் ஆரோக்கியத்திலும் மத்திய அரசு அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.
அந்த உத்வேகத்துடன், இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் விரிவாக்கப் பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளன.

இன்று, நவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பழைய மருத்துவமனையின் திறன் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இப்போது அதன் திறன் 100 படுக்கைகள் கொண்டதாக உயர்ந்துள்ளது. இந்த அரசாங்கத்தின் நோக்கம், தொலைதூர காடுகளில் வசிக்கும் என் பழங்குடிக் குடும்பங்கள் சிகிச்சை பெற போராட வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்துவதாகும். இதை மனதில் வைத்து, ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் கீழ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை அமைப்பதற்கான வேலைகள் விரைவாக, வேகமாக முன்னேறி வருகின்றன. ஒடிசாவில் கிட்டத்தட்ட 1150 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் அனைத்தும் தயாராகும்போது, வரும் அடுத்த சில ஆண்டுகளில் சுகாதார வசதிகளின் அடிப்படையில், நாட்டிலும் ஒடிசாவிலும் ஒரு புரட்சிகர மாற்றம் ஏற்படும்.

நண்பர்களே,

ஒடிசாவில் உள்ள சுகாதார வசதிகளுடனும், சாலை இணைப்பு வசதிகளையும் விரைவான வேகத்தில் மத்திய அரசு வலுப்படுத்த முயற்சிக்கிறது. மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் புதிய சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஒரு சாலை இணைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒடிசாவில் 10,000 கி.மீ. வரை தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தை அதிகரிப்பதற்கு மத்திய அரசு விரைந்து செயல்படுகிறது. இந்த இலக்கை மனதில் கொண்டு, இன்று சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான நான்கு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சண்டிகோல்-பத்ரக் பிரிவு மற்றும் தாங்கி – பிடலா பிரிவின் ஆறு வழிச் சாலைகள், கட்டாக்-ஆங்குல் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் கந்தகிரி மேம்பாலம் கட்டுவது என சுமார் ரூ.4,500 கோடி மதிப்புள்ள திட்டங்கள் ஒடிசாவின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த வசதிகள் மக்களின் போக்குவரத்தைச் சுலபமாக்குவதோடு வர்த்தகத்திலும் தொழில் புரிதலிலும் உதவும்.

நண்பர்களே,

ஒடிசாவின் உள்கட்டமைப்பு விரிவடைந்து வருவதால், புதிய வழிகள் மற்றும் வணிக மற்றும் வர்த்தக வாய்ப்புகள் விரிவடைந்து வருகின்றன. குறிப்பாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் ஒடிசாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. பாரதிப்-ஹைதராபாத் எண்ணெய் குழாய் பாதை ஒடிசாவிற்கு புதிய அடையாளத்தை கொடுக்கும். இது ஒடிசா இளைஞர்களுக்கு பல வேலை வாய்ப்புகளை வழங்கும்.
கிட்டத்தட்ட 1200 கி.மீ. தூரமுள்ள இந்த குழாய் பாதை ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஒடிசாவின் பெட்ரோலிய தேவைகளை பூர்த்தி செய்யும். பாரதீப் சுத்திகரிப்பு நிறுவனத்திலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமானத்திற்கான எரிபொருள் பல நகரங்கள் மற்றும் கிராமங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும். சுமார் ரூ.4,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் கிழக்கு இந்தியாவின் பெட்ரோலிய மையமாக ஒடிசா மாறும். இந்த குழாய் பதிப்பு பணிகள் முடிந்தவுடன் பெர்ஹாம்பூர், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் பெட்ரோல் விநியோகிப்பதற்கான விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.

நண்பர்களே,

ஏழைக் குடும்பங்களில் உள்ள ஏழைகளுக்குத் தூய்மையான மற்றும் புகை இல்லாத எரிபொருள் வழங்க இந்த அரசாங்கம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் எல்பிஜி சிலிண்டர்களை வெற்றிகரமாக வழங்கும் இலக்குக்கு நாங்கள் மிகவும் நெருக்கமாக உள்ளோம். இப்பொழுது வீட்டுகளுக்கு குழாய் பாதை வழியாக எரிவாயு விநியோகம் செய்வது தொடர்பான மாபெரும் பிரசாரத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பிரதான் மந்திரி உர்ஜா கங்கா யோஜனா திட்டத்தின் கீழ், குறிப்பாக கிழக்கு இந்தியாவில் குழாய்கள் மூலம் எரிவாயுவை வழங்க விரைவான வேகத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஒடிசா வரை பிஎன்ஜி குழாய் பாதைகள் வலையமைப்பை அமைக்க ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பொகரோ-ஆங்குல் பகுதியில் ஜகதீஷ்பூர்-ஹால்தியா-பொகரோ-தர்மா குழாய் பாதை அமைப்பதற்கான திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.3,500 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்தின் முடிவடையும் போது, ஒடிசாவின் 5 மாவட்டங்களுடன் ஜார்கண்ட் மாநிலத்தின் 6 மாவட்டங்களும் எரிவாயு குழாய்களுடன் இணைக்கப்படும்.

நண்பர்களே,

வளங்களின் வளர்ச்சிப் பணிகளுடன் கலாச்சார வளர்ச்சியும் இணைந்து மேம்படாவிட்டால்அது முழுமையடையாது. சுதந்திரத்திற்கான முதல் போரில் முக்கிய பங்காற்றிய பைகா கலகத்தின் 200ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த வேளையில், ஒரு சிறப்பு நினைவு தபால் தபால் முத்திரை மற்றும் நாணயம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பைகா கலகத்தின் ஹீரோவான புக்சி ஜகாபந்துவை போற்றும் வகையில் உத்கல் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை அமைப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த இருக்கையானது, பைகா உள்ளிட்ட அனைத்து தேசியவாத இயக்கங்கள் குறித்த வரலாறுகளையும், ஆதிவாசிகளின் இயக்கங்கள் குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளும் மையமாக மட்டுமின்றி, ஒடிசாவின் பழங்குடியின சமூகத்தின் சமூக பொருளாதார மாற்றங்களை புரிந்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.

நண்பர்களே,

உலகின் முன்னால், ஒடிசாவின் ஆழ்ந்த ஆன்மீக பாரம்பரியத்தை நிலைநாட்டுவதில், பைகா கிளர்ச்சி நாயகர்கள் மதிக்கப்பட வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது. இன்று, கட்டாக்கில் உள்ள லலித்கிரி என்ற இடத்தில் தொல்பொருள் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பையும் நான் பெற்றுள்ளேன். அங்கு, ஆரம்பகால பௌத்த காலத்தில் இருந்து பழங்கால, பண்டைய கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் உள்ளன. இது பௌத்த மதத்தை பின்பற்றுபவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களையும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கக் கூடியது. இது, ஒடிசாவின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த உதவுவதுடன், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பினையும் உருவாக்கி தரும்.

நண்பர்களே,

ஒடிசாவின் அனைத்து துறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அயராது, தொய்வின்றி தொடரும் என்று நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன். புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரமாக ஒடிசாவை மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கையை மேற்கொண்டு, உங்களோடு இணைந்து நாங்கள் முன்னேறுவோம். இந்த நம்பிக்கையுடன், பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக மீண்டும் ஒருமுறை ஒடிசா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஜகன்னாத்! அனைவருக்கும் நன்றி!