Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒசாமு சுசூகி மறைவுக்கு பிரதமர் இரங்கல்


உலக வாகனத் தொழில்துறையில் புகழ்பெற்ற  ஒசாமு சுசுகி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஒசாமு சுசூகியின் தொலைநோக்குப் பார்வை உலகளாவிய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ், சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் உலகளாவிய அதிகார மையமாக உருவெடுத்தது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு புதுமை, தொழில் விரிவாக்கத்தை மேற்கொண்டது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“வாகனத் துறையில் உலக அளவில் புகழ்பெற்று விளங்கிய  ஒசாமு சுசுகியின் மறைவு ஆழ்ந்த மனவருத்தத்தை அளிக்கிறது. அவரது தொலைநோக்குப் பார்வையிலான பணி வாகனம் குறித்த உலகளாவிய  கண்ணோட்டங்களை மறுவடிவமைத்தது. அவரது தலைமையின் கீழ், சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் உலகளாவிய அதிகார மையமாக மாறியது, சவால்களை வெற்றிகரமாக சமாளித்தது.  புதுமை மற்றும் விரிவாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் இந்தியா மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தார். மாருதி நிறுவனத்துடன் அவரது ஒத்துழைப்பு இந்திய வாகன உற்பத்தி சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சுசூகி உடனான எனது நினைவுகளை நான் போற்றுகிறேன், மேலும் அவரது நடைமுறை, தாழ்மையான அணுகுமுறை ஆகியவற்றை பாராட்டுகிறேன். கடின உழைப்பு, நுணுக்கமான விஷயங்களில் அதீத கவனம், தரத்தின் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு உதாரணமாக திகழ்ந்து வழிநடத்தினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், எண்ணற்ற அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

—–

TS/SV/KPG/DL