Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐ2யு2 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை

ஐ2யு2 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை


மேண்மை தங்கிய பிரதமர் லேபிட் அவர்களே,

மாட்சிமை தங்கிய ஷேக் முகமது பின் சையது அல் நஹியான் அவர்களே,

மேண்மை தங்கிய அதிபர் பைடன் அவர்களே,

முதலாவதாக புதிதாக பிரதமர்  பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் லேபிட்டுக்கு  பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய உச்சிமாநாட்டை நடத்துவதற்காகவும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கூட்டம் உண்மையான, நிலையான பங்குதார்களின் கூட்டமாகும்.

நாம் அனைவரும் சிறந்த நண்பர்களாக திகழ்வதோடு, பொதுவான நோக்கங்கள் மற்றும் பொதுவான நலன்களை கொண்டுள்ளோம்.

மேண்மை தங்கிய மற்றும் மாட்சிமை தங்கிய தலைவர்களே,

2யு2” (I2U2)  இன்றைய முதல் உச்சிமாநாட்டிலேயே ஆக்கப்பூர்வ செயல் திட்டத்தை கொண்டதாக உள்ளது.

 பல்வேறு துறைகளில் கூட்டாக மேற்கொள்ளக்கூடிய திட்டங்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம், மேலும் இவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறையையும் உருவாக்கியுள்ளோம்.

முதலீடு, நிபுணத்துவம் மற்றும் சந்தைகள் ஆகிய நம் நாடுகளின் பரஸ்பர வலிமையை ஓரணியில் திரட்டுவதன் மூலம்- நமது செயல்திட்டத்தை விரிவுப்படுத்துவதோடு, சர்வதேச பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவோம். உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் வேளையில்,  நமது கூட்டுறவு கட்டமைப்பு, செயல்முறை ஒத்துழைப்புக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது.

எரிசக்தி பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் 2யு2” (I2U2)  2யு2” (I2U2)   அமைப்பு, கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

 

***************