ஐ.பி.எஸ்.ஏ. உலக விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“ஐ.பி.எஸ்.ஏ உலக விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள்! நமது விளையாட்டு வீராங்கனைகளின் அசைக்க முடியாத உத்வேகத்தையும், திறமையையும் பறைசாற்றும் ஒரு மகத்தான சாதனை. இந்தியா பெருமிதம் கொள்கிறது!”
****
AD/RB/DL
Kudos to the Indian women's blind cricket team for winning the Gold at the IBSA World Games! A monumental achievement that exemplifies the indomitable spirit and talent of our sportswomen. India beams with pride! https://t.co/4Ee7JfF3UH
— Narendra Modi (@narendramodi) August 26, 2023