2016 நவம்பர் 7 முதல் 18 வரை மொரோக்கோ நாட்டு மராக்கேஷ் நகரில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்றம் மாநாட்டு கட்டமைப்புக்கான தரப்பினர் மாநாட்டின் பருவநிலைமாற்ற பேச்சு வார்த்தைகளுக்கான இந்தியாவின் அணுகுமுறைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் வழங்கியது.
பருவநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளின் சம்மந்தப்பட்ட தரப்பினர் மாநாட்டில் இந்தியாவின் அணுகுமுறை ஏழைகள் மற்றும் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் பிரிவினர் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. மேம்பாட்டுக்கான வெளியிடங்களை தகஅமைத்துக் கொண்டு பாதுகாத்து இழப்பையும் சேதத்தையும் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. நாட்டின் அனைத்து நிலை சமுதாயத்தின் நலன்களையும் ஒருங்கிணைத்தது இந்த அணுகுமுறை.
நாடு ஒன்றின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு அங்கு வெளியாகும் பசுமையில்ல வாயுக்களின் அளவுடன் தொடர்பு கொண்டது. பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை எதிர்த்துப் போரிடும் அதே சமயம் இந்தியாவிலும் வளரும் நாடுகளிலும் உள்ள மேம்பாட்டு வெளியிடங்களை பாதுகாப்பது அவசியமாகிறது. இந்தக் குறிப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அணுகுமுறை இந்த இலக்கை அடைய உதவுகிறது. அதே சமயம் நாட்டின் தக அமைவுத் தேவைகளை எதிர்கொள்ளவும் வழிவகை செய்கிறது.