Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐ டி ஐ நிறுவனத்துக்கு தனது பங்குகளை சிறப்பு தேசிய முதலீட்டு நிதியத்துக்கு செபியின் குறைந்த பட்ச அரசு பங்குகள் தேவையை சந்திக்கும் வகையில் மாற்றித்தர அமைச்சரவை ஒப்புதல்

ஐ டி ஐ நிறுவனத்துக்கு தனது பங்குகளை சிறப்பு தேசிய முதலீட்டு நிதியத்துக்கு செபியின் குறைந்த பட்ச அரசு பங்குகள் தேவையை சந்திக்கும் வகையில் மாற்றித்தர அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கீழ்கண்ட வகையில் தொலைத்தொடர்புத் துறையின் ஐ.டி.ஐ. நிறுவனத்துக்கு செபியின் குறைந்த பட்ச அரசு பங்குகள் தேவையை சந்திக்கும் வகையில் தனது பங்குகளை சிறப்பு தேசிய முதலீட்டு நிதியத்துக்கு மாற்றித்தர ஒப்புதல் அளித்துள்ளது.

a) குடியரசுத் தலைவரிடமிருந்து சிறப்பு தேசிய முதலீட்டு நிறுவனத்திற்கு போதுமான பங்குகளை மாற்றித்தர ஐ.டி.ஐ. நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படும். 10 சதவீத பொதுத்துறை பங்குகள் தேவையை நிறைவு செய்வதற்கான செபியின் நிபந்தனையை நிறைவு செய்யும் வகையில் 2014 பிப்ரவரி மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்த புதுப்பிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக ஐ.டி.ஐ நிறுவனத்திற்கு பங்குகளை வழங்கும் வகையில் மூலதனம் மானியம் விடுவிக்கப்படும் போது இது நடைமுறைப்படுத்தப்படும்.

b) 2017 – ம் ஆண்டு ஆகஸ்டு மாதவாக்கில் 25 சதவீத பொது துறைப் பங்குகளை வழங்க வேண்டும் என்ற செபியின் நிபந்தனையை நிறைவு செய்வதற்கு ஐ.டி.ஐ நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

பின்னணி

தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் தொலைத் தொடர்புத் துறையின் பொதுத்துறை நிறுவனமான ஐ.டி.ஐ நிறுவனம் 31.03.2015 நிலவரப்படி மொத்தம் ரூ 5,166 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.
ஐ.டி.ஐ நிறுவனத்தின் நிதி நிலைமை மிக நன்றாகவே உள்ளது. 2014 – பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஐ.டி.ஐ நிறுவனத்தை புதுப்பிப்பதற்கான ரூ. 4,156.79 கோடி திட்டத்துக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிப்பு திட்டத்தை அமல்படுத்த மூலதன செலவின தேவைகளுக்கு என 2014-15 ம் ஆண்டில் ஐ.டி.ஐ நிறுவனத்துக்கு ரூ. 192 கோடி வழங்கப்பட்டது. இந்த பங்கு மூலதனம் வழங்கப்பட்டதை அடுத்து மத்திய அரசின் பங்கு அளவு 90 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும்.

பட்டியல் நிறுவனங்களில் குறைந்த பட்ச அரசு பங்குகள் குறித்த செபியின் நிபந்தனைகயை நிறைவு செய்வதற்கு அரசின் பங்கு முதலீடு அளவு 90 சதவீதமாக மீண்டும் கொண்டுவரப்படுவதற்கு அரசுப் பங்குகளை விற்பனை செய்ய வேண்டும். இதுதவிர 2017 ஆகஸ்டு மாதத்திற்குள் பொதுத்துறை பங்குகளை குறைந்தபட்சம் 25 சதவீதம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஐ.டி.ஐ நிறுவனம் நிறைவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஐ.டி.ஐ நிறுவனம் தற்போதைக்கு நலிவு நிலையிலுள்ள நிறுவனமாகும். எனவே இப்போதைய நிலையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டால் சரியான மதிப்பீடு தொகைகள் கிடைக்க வாய்ப்பு இருக்காது. புதுப்பிப்பு திட்டத்தை அமல்படுத்தும் போது இந்த நிறுவனத்தின் நிலைமை மேம்பாடு அடைந்து இதன் பங்குகளின் மதிப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.