ஐரோப்பிய யூனியன் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கை உயர் பிரதிநிதி பெடெரிகா மோகெரினி, புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
பிரதமர் திரு. மோடியும், மோகெரினியும் பிராந்தி மற்றும் உலக அளவிலான பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் மேம்பாடு காண்பது குறித்து கலந்துரையாடினர். இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பில், குறிப்பாக பயங்கரவாத ஒழிப்பு பிரச்சினையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் மோடியும் மோகெரினியும் ஒப்புக்கொண்டனர்.
கடந்த இந்தியா – ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டுக்காக 2016 மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு தாம் மேற்கொண்ட வெற்றிகரமான பயணம் பற்றி பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். 2017 அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவுள்ள அடுத்த இந்தியா – ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டுக்காக தாம் காத்திருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.
*****