ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தலைவர் டாக்டர் வெர்னெர் ஹோயர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். வங்கியின் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
ஓர் ஆண்டுக்கு முன் ஐரோப்பிய – இந்தியா மாநாட்டில் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர் குழுவை சந்தித்த பிரதமர், தில்லியில் வங்கியின் மண்டல அலுவலகத்தை நிறுவ ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தார். இந்த அலுவலகம் இன்று துவங்கப்பட்டது.
இந்த சந்திப்பில் பேசிய பிரதமர், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் நிலைத்தன்மை குறித்து இந்தியாவின் கொள்கைகள் குறித்து விளக்கினார். லக்னோ மெட்ரோ மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை சார்ந்த திட்டங்களுக்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கி நூறு கோடிக்கு மேல் கடன் அளித்துள்ளது.
பருவநிலை மாற்றம் துறையில், இந்தியாவின் வலுவான மற்றும் முனைப்பான நடவடிக்கைகளை பாராட்டிய டாக்டர். ஹோயர், இத்துறையில் இந்தியாவின் முயற்சிக்கு ஐரோப்பிய வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.