ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மேதகு திரு அன்டோனியோ கோஸ்டா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றுள்ள அதிபர் திரு கோஸ்டாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ராஜீய கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட இரு தலைவர்களும், வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, பசுமை எரிசக்தி, டிஜிட்டல் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டனர்.
பரஸ்பரம் பயனளிக்கும் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் நிறைவு செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர்.
இருதரப்பிற்கும் உகந்த நேரத்தில், இந்தியாவில் நடைபெறவுள்ள அடுத்த இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை தலைவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்தனர்.
பரஸ்பர நன்மை பயக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் குறித்த கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
***
(Release ID: 2091000)
TS/BR/RR
Pleased to speak with President @antoniolscosta. India and the EU are natural partners. We are committed to working closely together to further strengthen the India-EU Strategic Partnership, including in the areas of technology, green energy, digital space, trade and investments.…
— Narendra Modi (@narendramodi) January 7, 2025