Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐதராபாத் ஜெனோம் பள்ளத்தாக்கில், உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்காக தேசிய விலங்கு வள நிறுவனத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, சுகாதார ஆராய்ச்சித் துறையும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரவை முன்னெடுத்த, ஐதராபாத், ஜெனோம் பள்ளதாக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மூலமாக உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒரு தேசிய விலங்கு வள நிறுவனத்தை உருவாக்க ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்துக்கான உத்தேச மதிப்பீடு 338.58 கோடி. இந்த நிறுவனம் 2018-2019 முதல் செயல்படத் தொடங்கும்.

இந்த நிறுவனம் இந்தியாவிலேயே விலங்குகளுக்கான முதல் ஆராய்ச்சி மையமாகவும், இந்தியாவிலேயே உயிரி மருத்துவ ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாகவும் விளங்கும்.

விலங்குகள் ஆராய்ச்சிக்கும், உயர் விலங்கினங்கள் வளர்ப்பு மரபணுமாற்றம் செய்யப்பட்ட ஆராய்ச்சிக்கான எலிகள், போன்றவற்றை வளர்ப்பதோடு, ஆராய்ச்சியில் உள்ள பல்வேறு மருந்துகளை ஆய்வு செய்வது போன்றவற்றுக்காக, இந்த நிறுவனம் ஒரு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் உள்ள நிறுவனமாக உருவாக்கப்படும். மருத்துவக் கல்லூரிகளின் ஆராய்ச்சி, பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி, உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்துக் கம்பெனிகளுக்கான ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட இந்த ஆராய்ச்சி நிலையம் பெரும் வகையில் உதவும்.

உயிரி மருத்துவ துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தை அமைப்பதற்காக ஐதராபாத் ஜெனோம் பள்ளதாக்கில் 102.69 ஏக்கர் நிலங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு இலவசமாக மாநில அரசு வழங்கியுள்ளது.