ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திருமிகு மரியா பெர்னாண்டா எஸ்பினோசா கார்சஸ், புது தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 73வது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு திருமிகு.
எஸ்பினோசாவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். ஐ.நா. பொதுச்சபையின் கூட்டத்தொடரின் போது தன்னுடைய முன்னுரிமைகளை திருமிகு எஸ்பினோசா பகிர்ந்து கொண்டார். அவது புதிய பொறுப்பினை வெளிப்படுத்துவதில் இந்தியாவின் முழுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை பிரதமர் உறுதியளித்தார்.
பயங்கரவாதம், ஐ.நா. சீர்திருத்தம் மற்றும் புவி வெப்பநிலை மாற்றம் ஆகியவை உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஐ.நா.வின் வலுவான நடவடிக்கைகளின் அவசியத்தையும் அவர்கள் விவாதித்தனர்.
*****
President-elect of the United Nations General Assembly calls on Prime Minister @narendramodi. https://t.co/J7WHQ0Whoh
— PMO India (@PMOIndia) August 10, 2018
via NaMo App pic.twitter.com/tixYebBNCc