Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐக்கிய நாடுகள் பருவ நிலை மாற்ற மாநாட்டு அமைப்புக்கு இரண்டாண்டுக்கு ஒருமுறை சமர்ப்பிக்கப்படும் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


ஐக்கிய நாடுகள் பருவ நிலை மாற்ற மாநாட்டு அமைப்புக்கு இந்தியா இரண்டாண்டுக்கு ஒருமுறை சமர்ப்பிக்கும் மேம்பாட்டு அறிக்கைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்

ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாடுஅமைப்புக்கு இந்தியா சமர்ப்பித்த முதல் அறிக்கையிலிருந்து இப்போது வரை உள்ள விவரங்களை இந்த அறிக்கை கொண்டிருக்கும். இரண்டாண்டுக்கு ஒருமுறை சமர்ப்பிக்கப்படும் இந்த அறிக்கையில் ஐந்து முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். தேசிய நிலவரம், தேசிய பசுமைக் குடில் வாயு அளவீடு, இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், நிதி, தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டு கண்காணிப்பு, அறிவிப்பு மற்றும் சரிபார்ப்பு ஏற்பாடு என்ற ஐந்து முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பருவகால மாற்றத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான தொழில்நுட்ப ஆலோசனை நிபுணர் குழு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் தலைமையிலான தேசிய வழிகாட்டு குழு ஆகியவை மூலம் ஆய்வு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. இந்தக் குழுவில் நிதி ஆயோக் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

**************

ஏடிஜி / வேணி