Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் பிரதமரை சந்தித்தார்


ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நஹ்யான் இன்று (25.06.2018) பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்தார்.

அபுதாபி பட்டத்து இளவரசரின் வாழ்த்துக்களை அவர் பிரதமர் திரு. மோடிக்கு தெரிவித்தார். பிரதமர் அன்புடன் அதனை ஏற்று தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, மக்களுடனான உறவுகள் உட்பட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவில் எரிசக்தி, வீட்டுவசதி, உணவு பதப்படுத்துதல், அடிப்படைக் கட்டமைப்பு போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் ஆர்வம் வளர்ந்து வருவதை அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவில் 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஆண்டுக்கு 60 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் பசுமைவெளி சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ ரசாயன வளாகத்தை அமைப்பது என்ற அபிதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் முடிவுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். முன்னதாக, இது தொடர்பாக இன்று (25.06.2018) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அவர் வரவேற்பு தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள இந்திய சமூகத்தவர் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கும், நலனுக்கும் பங்களிப்பு செய்திருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.