Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை


ஐக்கிய அரபு அமீரக அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின்  அதிபர் பிரதமருக்கும், இந்திய மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர், சந்திரயானின் வெற்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்தின், குறிப்பாக உலகளாவிய தெற்கின் வெற்றி என்று குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் ஜி20 உச்சிமாநாட்டிற்காக இந்தியா வரும் அவரை வரவேற்க ஆவலாக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

***

 

AP/BR/KPG