Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்ற பிரமுகர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்ற பிரமுகர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு


ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி நான்சி பெலோசி தலைமையில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவிற்கு வரவேற்றார். இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு இடையே உள்ள உறவினை மேலும் வலுப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு பிரிவும் அளிக்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நலன் விளைவிக்கும் துறைகள் குறித்த பிரச்சினைகள் மற்றும் இருத்தரப்பு உறவு குறித்த தனது கருத்துக்களை பிரதமர் பரிமாறிக்கொண்டார். அமெரிக்க நாடாளுமன்றத்துடனான பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.