Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐஎப்எஸ் தினத்தில், இந்திய வெளியுறவுப் பணி அதிகாரிகளுக்கு பிரதமர் வாழ்த்து


ஐஎப்எஸ் தினத்தில், இந்திய வெளியுறவு பணி அதிகாரிகளுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

டிவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், ‘‘ஐஎப்எஸ் தினத்தில், அனைத்து இந்திய வெளியுறவுப் பணி அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள். நாட்டுக்கு சேவை ஆற்றுவதிலும், உலகளாவிய தேசிய நலன்களை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது. வந்தே பாரத் திட்டம் மற்றும் இதர கொவிட் தொடர்பான விஷயங்களில், அவர்கள் நமது நாடு மற்றும் இதர நாட்டு மக்களுக்கும் உதவ மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கது’’ என குறிப்பிட்டுள்ளார்.