Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஏ.என்.ஆர். இந்தியாவின் பெருமை, அவரது அபாரமான  நடிப்புத் திறன் வரும் தலைமுறையினரைத் தொடர்ந்து மகிழ்விக்கும்: பிரதமர்


 திரு அக்கினேனி நாகேஸ்வர ராவை இந்தியாவின் பெருமையாகப் போற்றியுள்ள  பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவரது அபாரமான  நடிப்புத் திறன் வரும் தலைமுறையினரைத் தொடர்ந்து மகிழ்விக்கும் என்று  குறிப்பிட்டுள்ளார். திரு நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்ததில் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

திரு நாகார்ஜுனா அக்கினேனியின் பதிவிற்கு பதிலளித்துள்ள  திரு. மோடி கூறியிருப்பதாவது:

“நாகர்ஜுனா அவர்களே ,உங்கள் குடும்பத்தினருடன் உங்களைச்  சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏ.என்.ஆர். அவர்கள் இந்தியாவின் பெருமை, அவரது அபாரமான நடிப்புத் திறன் வரும் தலைமுறையினரை தொடர்ந்து மகிழ்விக்கும்.”

******************

PKV/KV